1
00:00:06,090 --> 00:00:08,008
பாஷ்: லெகஸியில் இதற்கு முன்...
2
00:00:08,008 --> 00:00:09,635
என் கட்சிகாரன்,
ராவுல் அர்ராயா.
3
00:00:09,760 --> 00:00:12,972
ஒரு நாள் இந்த பசங்க உன்னை
பார்க்க வருவாங்க.
4
00:00:15,808 --> 00:00:19,478
சில மாதங்கள் முன், கார்ல் ராஜர்ஸ்,
க்லென் கேடிங்கின் உடல்கள்
5
00:00:19,603 --> 00:00:21,647
கொள்கலனில் கண்டெடுக்கப்பட்டன.
6
00:00:21,647 --> 00:00:24,567
நீங்களும் பாஷும் என்ன
செய்தீங்க என தெரியணும்.
7
00:00:24,567 --> 00:00:25,568
ஹாரி பாஷ்.
8
00:00:25,568 --> 00:00:29,405
அழைப்பாணையை மேஜை மீது வெச்சிட்டு,
இங்கிருந்து இருவரும் கிளம்புங்க.
9
00:00:29,405 --> 00:00:31,741
மாத்யு ஃபெட்ஸிடம் பேச வாய்ப்பே இல்லை.
10
00:00:31,741 --> 00:00:33,200
அவன் நிச்சயமா செய்யறான்.
11
00:00:33,200 --> 00:00:35,327
- அவனை நீக்கணுமா?
- அவனை உபயோகிக்கலாம்.
12
00:00:36,620 --> 00:00:39,331
- உனக்கென்ன வேணும்?
- என்ன வேணும்னு நினைக்கிறே?
13
00:00:39,331 --> 00:00:42,334
லெக்ஸி பார்க்ஸின் கொலைக்கு
உங்களை கைது செய்யறோம்.
14
00:00:42,334 --> 00:00:44,086
- டேவிட்!
- ஹனி சாண்ட்லரை அழை.
15
00:00:44,086 --> 00:00:46,881
யாரோட எங்கே இருந்தேன்னு சொல்றியா?
16
00:00:47,047 --> 00:00:49,300
ஜேம்ஸ் ஆலன். அவன் என் டீலர்.
17
00:00:49,300 --> 00:00:52,428
- என்ன விஷயம்?
- கவலைப்பட ஏதுமில்லை.
18
00:00:54,138 --> 00:00:55,473
- க்ரூ எப்படி?
- நல்லாருக்கு.
19
00:00:55,473 --> 00:00:57,558
பொறாமையா இருக்கு. போரடிக்குது.
20
00:01:58,494 --> 00:01:59,411
எல்லாம் உனக்கே.
21
00:02:10,339 --> 00:02:13,717
இந்த கீறல்கள் பற்றி கவலை வேண்டாம்.
நாங்க பார்த்துக்கறோம்.
22
00:02:13,717 --> 00:02:15,803
உங்க வைப்பு நிதியை எங்கே அனுப்ப?
23
00:02:15,803 --> 00:02:18,764
தயாரானதும் சொல்லு.
நான் எடுத்துக்கறேன்.
24
00:02:22,351 --> 00:02:24,061
பிரச்சினைக்கு வருந்தறேன்.
25
00:03:23,037 --> 00:03:24,121
என்ன அவசரம்?
26
00:03:24,121 --> 00:03:26,957
அமைதி. நான் வேற ஊருக்கு போகலை.
27
00:03:26,957 --> 00:03:29,752
- நீ தப்பு பண்றேன்னு தோணுது.
- தெரியும்.
28
00:03:29,877 --> 00:03:32,171
ஆனால் என் முடிவுதானே.
29
00:03:32,171 --> 00:03:35,549
அது வந்து... அதாவது, என்ன அவசரம்?
30
00:03:35,674 --> 00:03:39,762
- சில மாதங்களே ஆச்சு.
- நேரமாச்சு. எனக்குன்னு இடம் வேணும்.
31
00:03:39,762 --> 00:03:42,097
அப்பா, இது உங்க இடம்.
நான் ஒண்டியிருக்கேன்.
32
00:03:42,097 --> 00:03:44,058
இல்லை, அப்படியில்லை. இது உன் வீடு.
33
00:03:50,189 --> 00:03:54,652
நல்ல பையனா இரு. உங்க அப்பாவை பார்த்துக்கோ.
34
00:03:58,364 --> 00:04:00,908
- உன்னை பற்றி கவலை.
- உங்களை பற்றி கவலை.
35
00:04:04,662 --> 00:04:07,456
- ஐ லவ் யூ, மேட்ஸ்.
- ஐ லவ் யூ.
36
00:04:09,124 --> 00:04:10,626
இங்கிருந்து கிளம்பு.
37
00:04:28,769 --> 00:04:31,772
ஆமாம், தெரியும். நீயும், நானும்தான், பையா.
38
00:05:25,951 --> 00:05:28,245
பாஷ்: லெகஸி
39
00:05:36,754 --> 00:05:40,841
மேற்கு ஹாலிவுட் நகரம் பொது பாதுகாப்பிற்கு
முதலில் முன்னுரிமை அளிக்கும்,
40
00:05:40,841 --> 00:05:43,052
சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை,
41
00:05:43,052 --> 00:05:46,805
வாழ்க்கைத்தரம், பகுதியின்
பேண்தகைமையை தியாகம் செய்யாமல்.
42
00:05:46,805 --> 00:05:50,601
எச்சரிக்கை மிகுதியால்,
நகர கவுன்சில் முடிவு செய்துள்ளது
43
00:05:50,726 --> 00:05:52,853
2021 ஹாலோவீன் திருவிழாவை
ரத்து செய்ய.
44
00:05:52,853 --> 00:05:53,854
லெக்ஸி பார்க்ஸ் - உதவி நகர மேலாளர்
மேற்கு ஹாலிவுட்
45
00:05:54,688 --> 00:05:58,025
பொது பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை
காப்பது மிக முக்கியம்,
46
00:05:58,025 --> 00:06:02,404
இந்த கலகலப்பான, ஆக்கப்பூர்வ நிகழ்ச்சியை
அடுத்த வருடம் கொண்டு வர பார்க்கிறோம்.
47
00:06:05,199 --> 00:06:07,534
கூட வேலை செய்ய லெக்ஸி எப்படி?
48
00:06:07,534 --> 00:06:11,622
அவ அழகா, சின்னதா இருந்ததால மக்கள்
அவளை குறைத்து எடை போட்டாங்க,
49
00:06:12,915 --> 00:06:14,958
ஆனால் அவ எல்லாம் செய்து முடிப்பா.
50
00:06:14,958 --> 00:06:16,877
அவளுக்கு எதிரிகள் இருந்தனரா?
51
00:06:16,877 --> 00:06:19,671
வழக்கமாக அதிருப்தி அடைந்த தொகுதி மக்கள்.
52
00:06:19,838 --> 00:06:24,301
அவ எதுக்கும் கவலை படலை.
எதுக்காகவும் கொலை செய்யும் அளவில்லை.
53
00:06:29,306 --> 00:06:30,140
சாண்ட்லர்.
54
00:06:30,140 --> 00:06:33,060
என் அலிபி சாட்சி,
ஜேம்ஸ் ஆலன் கிட்ட எதுவும் பெயராது.
55
00:06:33,060 --> 00:06:34,520
எண் சரியா வரலையா?
56
00:06:34,520 --> 00:06:37,481
அழைச்சேன். பதில் இல்லை.
வாய்ஸ்மெயில் நிரம்பியாச்சு.
57
00:06:37,481 --> 00:06:39,650
அவன் டீலர். ப்ரையர்ஸ் இருக்கலாம்.
58
00:06:39,650 --> 00:06:42,486
அந்த வகையில், நான் மோவை தேடச் சொன்னேன்.
59
00:06:42,486 --> 00:06:45,572
பழைய கைதிலிருந்து ஒரு
புக்கிங் எண்ணை தேடினான்.
60
00:06:45,572 --> 00:06:47,574
அதை அனுப்பு. கடைசி இடத்தை அறிவோம்.
61
00:06:48,367 --> 00:06:50,202
இதோ அனுப்பறேன். நன்றி, ஹாரி.
62
00:06:50,702 --> 00:06:54,039
- உன் க்ளையன்டை பார்க்கிற விஷயம்?
- ஏற்பாடு பண்றேன்.
63
00:07:02,339 --> 00:07:05,300
- பாஷ், ஒரு நிமிடம் இருக்கா?
- பிரதிநிதி தேவையா?
64
00:07:05,467 --> 00:07:08,846
இப்பவே என்னோட வரலைன்னா
தேவைப்படலாம். போகலாம்.
65
00:07:12,850 --> 00:07:15,686
- இது எதைப் பற்றி?
- சார்ஜ் உன்னோட பேசணுமாம்.
66
00:07:16,812 --> 00:07:19,273
- எதைப்பற்றி?
- சொல்லலை.
67
00:07:19,273 --> 00:07:21,441
எனக்கு பிரச்சினையா?
68
00:07:21,441 --> 00:07:23,026
தெரிஞ்சுப்போம்.
69
00:07:27,739 --> 00:07:29,700
- ஆபீசர் பாஷ்.
- சார்ஜன்ட்.
70
00:07:30,784 --> 00:07:32,202
ப்ரேஸ்லெட் வேலை சிறப்பு.
71
00:07:32,202 --> 00:07:35,205
- கொள்ளை டிடெக்டிவ்ஸுக்கு மகிழ்ச்சி.
- நன்றி.
72
00:07:35,205 --> 00:07:38,000
வாஸ்கெஸும் உன் புகழ் பாடறா.
73
00:07:38,000 --> 00:07:42,087
- நான் அதிகமா சொல்லியிருக்கலாம்.
- எங்க பிரிவில் ஒரு இடம் காலி,
74
00:07:42,087 --> 00:07:45,174
அதை நிரப்ப சரியான ஆளை தேடிட்டு இருந்தேன்.
75
00:07:45,174 --> 00:07:46,884
- நிஜமாவா?
- ஆர்வமா?
76
00:07:47,509 --> 00:07:51,430
- வாஸ்கெஸும் நானும் கூட்டாளிகளா?
- அவளும் தேர்வானாள்.
77
00:07:52,097 --> 00:07:55,267
யாராவது பொதுமக்களை
மேட் போலீஸிடமிருந்து காப்பாற்றணுமே.
78
00:07:55,392 --> 00:07:56,476
அதை யோசிக்கலாமா?
79
00:07:56,476 --> 00:07:59,146
அவ வேலையை தொடங்க ஆர்வமா
இருக்கான்னு சொன்னே.
80
00:07:59,146 --> 00:08:01,982
- நானும் நினைச்சேன்.
- இல்லை, இருக்கேன்.
81
00:08:01,982 --> 00:08:05,569
- ஆர்வம். எப்ப தொடங்கணும்?
- அணிக்கு வரவேற்கிறேன்.
82
00:08:08,697 --> 00:08:11,366
அவனுக்கு 19 வயது, பயந்திருந்தான்.
83
00:08:11,366 --> 00:08:13,994
அவன் பெற்றோரை தெரியும்,
வழக்கை இலவசமா எடுத்தேன்,
84
00:08:13,994 --> 00:08:17,039
போதை பொருள் வைத்திருந்ததா
குற்றச்சாட்டை குறைச்சு,
85
00:08:17,039 --> 00:08:19,625
டேவிடை திட்டத்தில் சேர்த்தேன்.
86
00:08:20,626 --> 00:08:22,920
அவன் வாழ்க்கையில் உருப்பட்டான்.
87
00:08:22,920 --> 00:08:24,546
அப்படீன்னு நினைச்சேன்.
88
00:08:24,671 --> 00:08:27,549
இப்ப, இதெல்லாம். ரொம்ப கொடுங்கனவு.
89
00:08:31,053 --> 00:08:33,138
வேறு என்ன உன்னை தூங்க விடுவதில்லை?
90
00:08:37,309 --> 00:08:39,102
அன்றிரவு தியானத்தில்...
91
00:08:42,522 --> 00:08:44,650
எப்படி போகுது? தியானம்?
92
00:08:44,816 --> 00:08:46,902
- உதவுதுன்னு நினைக்கிறேன்.
- சொல்லு.
93
00:08:49,071 --> 00:08:53,533
என்னை ஒருத்தன் பார்த்திட்டிருந்தான்,
பிறகு வந்து, பேசினான்.
94
00:08:54,534 --> 00:08:55,827
அறிமுகம் தந்துக்கிட்டான்.
95
00:08:57,287 --> 00:08:59,539
- உன்னிடம் வழிஞ்சானா?
- தெரியலை.
96
00:09:01,625 --> 00:09:02,876
ஒருவேளை, சிறிது.
97
00:09:04,336 --> 00:09:05,629
உனக்கு எப்படி இருந்தது?
98
00:09:06,046 --> 00:09:08,799
எரிச்சலா. கோபமா.
99
00:09:11,093 --> 00:09:12,010
இன்னும் சொல்லு.
100
00:09:13,387 --> 00:09:15,889
அந்த இடம் பிடிச்சுது.
திரும்ப போக விருப்பம்.
101
00:09:17,182 --> 00:09:19,893
நான் சமாளிக்க வேண்டியதில்லை...
102
00:09:20,644 --> 00:09:23,272
- எதை?
- கவனம், வழிசல்.
103
00:09:23,397 --> 00:09:25,107
தெரியுமா, நடனம், என்னமோ.
104
00:09:27,609 --> 00:09:29,569
அவன் பேசத்தான் விரும்பறானோ.
105
00:09:30,612 --> 00:09:32,030
ஏன் அப்படி சொல்றே?
106
00:09:34,157 --> 00:09:36,201
விளைவை முன்பே தீர்மானிக்காதே.
107
00:09:37,536 --> 00:09:40,038
வேண்டாம், நன்றி. ஆர்வமில்லை.
108
00:09:40,831 --> 00:09:44,418
- அவனிடமா பொதுவிலா?
- ஒவ்வொன்றிலும். இரண்டிலும்.
109
00:09:45,669 --> 00:09:49,089
- அதைப்பற்றி பேசணும்.
- இல்லை, நீ அதைப்பற்றி பேசு.
110
00:10:02,519 --> 00:10:04,479
ஹலோ. தொந்தரவுக்கு மன்னிக்கணும்.
111
00:10:05,522 --> 00:10:07,733
- நான் ஜேம்ஸ் ஆலனை தேடறேன்.
- நீங்க யார்?
112
00:10:07,733 --> 00:10:10,777
என் பெயர் ஹாரி ஹாஷ்.
நான் தனியார் துப்பறிவாளன்.
113
00:10:10,777 --> 00:10:13,613
- நீங்க மிஸ்...
- ஆலன், அவன் சகோதரி.
114
00:10:14,948 --> 00:10:16,908
நான் அவரை சில கேள்விகள் கேட்கணும்.
115
00:10:16,908 --> 00:10:17,909
இருக்காரா?
116
00:10:19,661 --> 00:10:20,579
ஜேம்ஸ் இறந்தாச்சு.
117
00:10:21,663 --> 00:10:23,623
அடடே, நான் வருந்தறேன்.
118
00:10:25,417 --> 00:10:26,668
இது எப்ப நடந்தது?
119
00:10:26,668 --> 00:10:29,338
ஓரிரு நாட்கள் முன்புன்னு நினைக்கிறேன்.
120
00:10:29,463 --> 00:10:32,049
இரு டிடெக்டிவ்ஸ் நேற்றிரவு
வீட்டுக்கு வந்தாங்க.
121
00:10:32,049 --> 00:10:35,886
அவன் உடல் ஹாலிவுட்டில் ஒரு
சந்தில் இருந்ததா சொன்னாங்க.
122
00:10:36,011 --> 00:10:38,305
எவ்வளவு நேரம் அங்கிருந்தான்னு
தெரியலையாம்.
123
00:10:38,305 --> 00:10:41,850
- என்ன நடந்ததென தெரியுமா?
- ஒருவேளை, ஓவர்டோஸா இருக்கலாம்.
124
00:10:43,060 --> 00:10:45,729
அது ஆச்சரியமில்லை, அவன் வாழ்ந்த வாழ்க்கை.
125
00:10:46,146 --> 00:10:48,357
இந்த டிடெக்டிவ்ஸ்,
ஏதாவது அட்டை தந்தாங்களா?
126
00:10:49,608 --> 00:10:52,986
- உள்ளே இருக்கு. ஒரு நிமிஷம்.
- நன்றி.
127
00:11:02,079 --> 00:11:04,748
சாண்ட்லர்? பாஷ். என்னை அழை.
128
00:11:09,795 --> 00:11:14,132
திரு. அர்ராயா இப்ப இங்க டெர்மினல்
ஐலாண்டுல இருக்கான்.
129
00:11:14,299 --> 00:11:17,552
- டி பகுதி. நீ இருக்கற இடம்.
- தற்செயல்.
130
00:11:17,677 --> 00:11:21,306
ஒரு நாள் இந்த பசங்க உன்னை
பார்க்க வருவாங்க.
131
00:11:21,306 --> 00:11:23,100
எதுக்கு செய்வாங்க?
132
00:11:23,225 --> 00:11:24,768
ராவுல் கடமை பட்டிருக்கான்.
133
00:11:27,896 --> 00:11:32,609
வில்லி டாட்ஸ் கொலையான பிறகு,
நீ ஹனி சாண்ட்லரை சந்திச்சிருக்கே.
134
00:11:32,609 --> 00:11:34,361
அந்த உரையாடலும் பதிவாச்சா?
135
00:11:34,361 --> 00:11:37,239
நிச்சயமா இல்லை.
வழக்கறிஞர்-க்ளையன்ட். தனிப்பட்டது.
136
00:11:37,239 --> 00:11:39,950
நீங்க எப்பவும் விதிகளை பின்பற்றுவீங்க.
137
00:11:39,950 --> 00:11:43,245
- அவங்க உதவி கேட்டாங்களா?
- ஆமாம். உங்க உயிரை காப்பாற்றினாங்க.
138
00:11:43,245 --> 00:11:47,082
- அது பெரிய கடன்.
- நான் ஒரு விஷயம் சொல்றேன்.
139
00:11:48,875 --> 00:11:50,293
அது பொய்.
140
00:11:50,502 --> 00:11:51,878
டாட்ஸிடம் பொய் சொன்னார்.
141
00:11:51,878 --> 00:11:54,589
அவன் ரஷ்ஷியர்களை
காட்டிக் கொடுத்து, செத்தான்.
142
00:11:54,840 --> 00:11:57,092
அப்ப, உன் ஆட்களை அவன் மீது ஏவலையா?
143
00:11:57,759 --> 00:12:01,763
தேவைப்படலை. ஏதோ ரஷ்ஷிய கோமாளி
அவனை ஷவரில் கொன்றான்.
144
00:12:01,930 --> 00:12:03,932
- பகல் அறையிலா?
- உன்னோடது இல்லை.
145
00:12:03,932 --> 00:12:05,600
கேட்டீங்க, சொல்லிட்டேன்.
146
00:12:05,600 --> 00:12:09,104
சாண்ட்லர் உன்னை பார்க்க வந்த போது,
எதைப்பற்றி பேசினாங்க?
147
00:12:09,271 --> 00:12:11,606
- பெரும்பாலும், உங்களை பற்றி.
- என்னையா?
148
00:12:11,857 --> 00:12:13,692
ஃபெட்ஸ் நீங்க.
149
00:12:13,817 --> 00:12:17,571
எப்படி டாட்ஸ் விஷயத்தில்
அவங்களை நீங்க சந்தேகப்படறீங்க,
150
00:12:17,904 --> 00:12:21,116
கொலைக்கு பொய் சாட்சி,
சதி அல்லது வேறு ஏதோ.
151
00:12:21,533 --> 00:12:24,661
எனக்கும் டாட்ஸுக்கும் சம்பந்தம்
இருந்ததான்னு கேட்டாங்க.
152
00:12:24,661 --> 00:12:26,413
நான் ஏதோ வேலையை விட்டு,
153
00:12:26,538 --> 00:12:29,374
என் கடமையா நினைச்சா மாதிரி, தெரியுமா...
154
00:12:29,499 --> 00:12:31,293
- கடனை திருப்பித்தர.
- செய்தியா?
155
00:12:31,293 --> 00:12:35,338
"காட்டிக் கொடுக்க கூடாது"
என்பதில் எந்த பகுதி உங்களுக்கு புரியலை?
156
00:12:48,310 --> 00:12:50,437
மார்டின் ரோஸுக்கான
ஆச்சரிய பிறந்தநாள் விழா
157
00:12:50,437 --> 00:12:51,563
கலந்து கொள்வேன்
158
00:12:53,106 --> 00:12:56,359
- பூம்! உள்ளே வந்தாச்சு.
- அவ்வளவு தானா?
159
00:12:56,902 --> 00:12:59,404
- அவன் ஃபோனில் இருக்கோம்.
- அவனுக்கு தெரியாதா?
160
00:12:59,404 --> 00:13:02,616
அது தெரிய நானா இருக்கணும்.
இதை கண்டுபிடிக்க முடியாது.
161
00:13:03,909 --> 00:13:05,577
இது முழு அணுகலையும் தருமா?
162
00:13:05,952 --> 00:13:07,746
இமெயில், செய்தி, அழைப்பு, எல்லாம்.
163
00:13:08,955 --> 00:13:10,040
நீ மேதை.
164
00:13:10,040 --> 00:13:12,584
மேடம், சன்னி ராலின்ஸ் மேதை.
165
00:13:12,584 --> 00:13:15,253
நான் சிறப்பாக நினைக்கும்
தாழ்மையான ஹாக்கர்.
166
00:13:20,717 --> 00:13:21,635
அலோஹா.
167
00:13:24,554 --> 00:13:25,972
வந்ததை பாராட்டறேன், மான்க்.
168
00:13:25,972 --> 00:13:28,433
நீ பில்லுக்கு பணம் தருவதை பாராட்டுவேன்.
169
00:13:28,433 --> 00:13:30,310
நிச்சயம் செய்வே.
170
00:13:30,310 --> 00:13:33,313
மேடி எப்படி இருக்கான்னு விசாரிக்க தான்.
171
00:13:33,438 --> 00:13:34,689
அவ சிறப்பா இருக்கா.
172
00:13:34,689 --> 00:13:37,817
இந்த திருட்டு ப்ரேஸ்லெட் விஷயம்?
173
00:13:37,943 --> 00:13:42,948
எல்லா கணக்குகளும், பிடிவாதமா,
விடாப்பிடியா. அவ அப்பா போலவே.
174
00:13:43,823 --> 00:13:46,368
- ப்ரேஸ்லெட் விஷயமா?
- என்ன? அவ சொல்லலையா?
175
00:13:46,576 --> 00:13:48,954
- இருவரும் பிஸியா இருந்தோம்.
- சரி.
176
00:13:49,454 --> 00:13:52,165
சரியான மக்களை கவர்ந்தா.
177
00:13:52,165 --> 00:13:57,045
பி1 க்ரூவில் ஒரு இடம் பிடிக்கிறது,
அது பெரிய விஷயம்.
178
00:13:57,045 --> 00:14:00,215
- ரொம்ப பெரிசு.
- அதாவது, நீ பெருமைப்படணும்.
179
00:14:01,508 --> 00:14:02,425
முடிந்த அளவு.
180
00:14:13,979 --> 00:14:14,813
எப்படி போச்சு?
181
00:14:15,397 --> 00:14:19,901
ஐந்து மைல்கள். சாதாரண விஷயம்.
நீ என்ன செய்யறே?
182
00:14:22,028 --> 00:14:25,240
என் பாதிக்கப்பட்டவர் தாக்க
அறிக்கையை எழுதறேன்.
183
00:14:25,240 --> 00:14:26,241
எப்படி போகுது?
184
00:14:27,325 --> 00:14:28,326
சீக்கிரமா இல்லை.
185
00:14:30,036 --> 00:14:31,371
நான் பார்க்கலாமா?
186
00:14:35,625 --> 00:14:39,629
ஆமாம். "நான்கு மாதங்கள் முன்பு,
வாழ்க்கை மாறி போனது."
187
00:14:41,047 --> 00:14:41,965
அது தொடக்கம்.
188
00:14:42,090 --> 00:14:47,178
நான் ஏன் இதை செய்யறேன்?
அது முக்கியமா?
189
00:14:47,554 --> 00:14:50,807
இது உனக்கு நல்லது.
ஒரு பிரச்சினையை தீர்க்கிறது போல.
190
00:14:52,017 --> 00:14:53,768
அப்படித்தான் அப்பா சொல்றார்.
191
00:14:53,893 --> 00:14:54,853
உனக்கு தோணலையா?
192
00:14:56,104 --> 00:15:00,442
அதாவது, நான் பிழைச்சேன்.
அவன் சிறைக்கு போறான், அதுதான் முக்கியம்.
193
00:15:02,736 --> 00:15:04,321
நீ இதை செய்ய வேண்டாம்.
194
00:15:05,822 --> 00:15:06,740
உன் விருப்பம்.
195
00:15:09,534 --> 00:15:11,703
நான் புதுசா தொடங்கணும்.
196
00:15:14,664 --> 00:15:16,916
- உனக்கு என்ன தேவை தெரியுமா?
- என்ன?
197
00:15:18,668 --> 00:15:21,671
- நீ என்ன பண்றே?
- எப்படி தெரியுது?
198
00:15:21,671 --> 00:15:22,797
பேன்கேக்ஸ் பண்றியா?
199
00:15:23,089 --> 00:15:25,133
- உன்னை உற்சாகப்படுத்த.
- அது கிடக்கட்டும்.
200
00:15:25,133 --> 00:15:26,176
பேன்கேக்ஸ் வேணாமா?
201
00:15:26,176 --> 00:15:27,719
இல்லை. நல்ல யோசனை. போவோம்.
202
00:15:38,855 --> 00:15:42,025
- நீங்க எடுத்த வழக்கு...
- லெக்ஸி பார்க்ஸ் கொலை.
203
00:15:42,025 --> 00:15:44,277
மேற்கு ஹாலிவுட் பெண்.
204
00:15:44,277 --> 00:15:46,946
குற்றம் சாட்டப்பட்ட
டேவிட் ஃபாஸ்டருக்கு வக்கீல்.
205
00:15:46,946 --> 00:15:49,449
எங்க விக்டிமுக்கும் உங்க
க்ளையன்டுக்கும் என்ன?
206
00:15:49,449 --> 00:15:53,787
உங்க பாதிக்கப்பட்ட ஜேம்ஸ் ஆலன்,
என் ஆளோட அலிபி.
207
00:15:53,787 --> 00:15:58,541
ஃபாஸ்டர்படி, லெக்ஸி பார்க்ஸ் இறந்த
இரவன்று அவங்க ஒண்ணா இருந்தாங்களாம்.
208
00:15:58,541 --> 00:16:00,627
ஆலன் சகோதரி ஓவர்டோஸால
209
00:16:00,627 --> 00:16:03,296
அவ சகோதரன் இறந்ததா நினைக்கிறா.
210
00:16:03,296 --> 00:16:05,382
அந்த மாதிரியான உணர்வை தந்திருக்கலாம்.
211
00:16:05,382 --> 00:16:06,883
அது பிரேத பரிசோதனைக்கு முன்.
212
00:16:07,384 --> 00:16:10,053
கம்பி மூலம் நெறிப்பு.
213
00:16:10,053 --> 00:16:12,555
முந்தைய கொலைக்கு சம்பந்தப்பட்டு
இருக்கலாம்.
214
00:16:12,555 --> 00:16:14,808
ஆண் விபச்சாரி சந்தில் தள்ளப்பட்டு.
215
00:16:14,808 --> 00:16:16,601
அதே எம்ஓ.
தொடர் கொலையா இருக்கலாம்.
216
00:16:18,019 --> 00:16:19,187
முக்கியமானதை மறைச்சே.
217
00:16:20,689 --> 00:16:23,108
அப்ப, ஜேம்ஸ் ஆலன் விபச்சாரியா?
218
00:16:23,400 --> 00:16:27,362
செக்ஸ் தொழிலாளி, ஆண் எஸ்கார்ட்.
விபச்சாரத்திற்காக நிறைய ஆஜரானவன்.
219
00:16:29,364 --> 00:16:31,116
அவன் ஃபோன் கிடைச்சுதா?
220
00:16:31,116 --> 00:16:33,034
இல்லை, துரதிர்ஷ்டவசமாக.
221
00:16:33,618 --> 00:16:36,413
அது அவன் வாடிக்கையாளர் பட்டியல்தானே?
222
00:16:36,413 --> 00:16:37,747
- நாட்காட்டி.
- தெரியும்.
223
00:16:39,207 --> 00:16:43,378
சரி, இள இரத்தங்களே.
அது கிடைச்சா எனக்கு தெரியப்படுத்துங்க.
224
00:16:45,463 --> 00:16:46,798
பார்ப்போம்.
225
00:16:52,512 --> 00:16:55,515
- எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்.
- அதே பழைய பாஷ்.
226
00:16:55,515 --> 00:16:58,101
கோல்ட் டிக்கர்ஸ்
என்டர்டெய்ன்மென்ட்
227
00:17:03,189 --> 00:17:04,983
ஆமாம், நன்றி.
228
00:17:04,983 --> 00:17:06,860
இனி முகப்பு மேஜை இல்லை.
229
00:17:07,819 --> 00:17:08,945
அது எப்படி இருக்கு?
230
00:17:11,823 --> 00:17:13,199
லாட்டரி வென்றது போல.
231
00:17:18,621 --> 00:17:22,041
நீ எப்படி? நிச்சயமா நீ வேலைக்கு திரும்ப
ஆவலா இருப்பே.
232
00:17:23,084 --> 00:17:25,795
- நீ திரும்ப வர்றியா? அப்படியா?
- எனக்கு தெரியாது.
233
00:17:26,921 --> 00:17:28,381
அது நாளை பொறுத்து.
234
00:17:28,381 --> 00:17:31,134
எழும் போது கழுத்தும் முதுகும்
எவ்வளவு வலிக்குதோ.
235
00:17:31,134 --> 00:17:33,553
எங்கம்மா ஆசைப்படி நடந்தா,
திரும்பவே முடியாது.
236
00:17:33,553 --> 00:17:37,932
எங்கப்பா குறுக்கிட்டா,
ஓய்வு வரை முகப்பு மேஜைதான்.
237
00:17:38,808 --> 00:17:41,519
உன் புது பணி பற்றி தெரியுமா?
238
00:17:41,644 --> 00:17:45,607
அவர் பயப்படலாம், ஆனால் மறந்துடுவார்.
239
00:17:48,443 --> 00:17:49,360
சரி.
240
00:17:49,486 --> 00:17:52,238
மேடிக்கு! உன் சிறப்பானதை கொண்டு வா, பூட்.
241
00:17:53,239 --> 00:17:54,616
"பூட்" என அழைக்காதே.
242
00:17:55,658 --> 00:17:57,660
- நியாயம்தான்.
- மேடிக்கு.
243
00:17:57,952 --> 00:17:58,870
அப்படியே!
244
00:18:03,041 --> 00:18:05,835
மூஸோ & ஃப்ராங்க் க்ரில்
245
00:18:06,294 --> 00:18:08,505
டேவிட் அலிபிக்கு இவ்வளவு.
246
00:18:08,505 --> 00:18:12,008
- டிஎன்ஏ வேற.
- அதை சந்தேகமா பார்க்கணும்.
247
00:18:12,550 --> 00:18:14,803
என்ன? வேணும்னே செய்ததா?
யாராவது வெச்சாங்களா?
248
00:18:14,969 --> 00:18:17,430
அது சாத்தியம். நீயேதான் சொன்னே.
249
00:18:17,430 --> 00:18:20,475
- அவங்க சந்திக்கவே இல்லை.
- நமக்கு தெரிந்தவரை.
250
00:18:20,475 --> 00:18:24,062
உண்மையா என்ன தெரியும்னா, டேவிட்,
நம்ம க்ளையன்ட், பொய்யன்.
251
00:18:24,395 --> 00:18:27,357
ரகசிய வாழ்க்கையுள்ளவன்,
ரகசியமாக வைத்திருக்க நினைத்தான்.
252
00:18:27,482 --> 00:18:29,943
தொடக்க உரையின் முதல் வரி போலிருக்கு.
253
00:18:29,943 --> 00:18:33,905
பொய்யன், விபச்சாரன், அடிமை,
ஆனால் கொலைகாரன் இல்லை.
254
00:18:34,030 --> 00:18:36,324
- அவனை சந்திக்க ஆவலா இருக்கேன்.
- நாளை.
255
00:18:36,324 --> 00:18:39,202
வக்கீல்-க்ளையன்ட் சந்திப்பு,
கூடவே துப்பறிவாளர்.
256
00:18:39,202 --> 00:18:40,495
நல்லது.
257
00:18:40,495 --> 00:18:44,415
வேறு பிரச்சினைகள் இருக்கு.
மோ, மாத்யு ஃபோனில் இருக்கான்.
258
00:18:44,541 --> 00:18:45,458
ரேடியோ அமைதி.
259
00:18:45,625 --> 00:18:47,710
- நாம கவலை படணுமா?
- அக்கறை படணும்.
260
00:19:07,814 --> 00:19:11,150
- யாருடனோ குடிக்கிறா.
- யார்?
261
00:19:11,150 --> 00:19:14,737
போலீஸ் போலிருக்கு.
போலீஸ் போல நடந்துக்கறான்.
262
00:19:14,737 --> 00:19:16,322
இங்கிருந்து போ.
263
00:19:19,617 --> 00:19:21,953
இந்த கிறுக்கனுங்களை நம்பாதே. வாந்தி வருது.
264
00:19:22,078 --> 00:19:25,498
ஹேய். ஒரு டாலர் தாயேன், சாப்பிட
ஏதாவது வாங்கிக்கறேன்?
265
00:19:25,665 --> 00:19:26,583
இங்கிருந்து போ.
266
00:19:28,251 --> 00:19:29,460
இங்கிருந்து போ.
267
00:19:29,627 --> 00:19:34,048
சரி. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
நல்ல மாலையாகட்டும்.
268
00:19:48,521 --> 00:19:52,859
- இந்த ஆளை நம்ப முடியுதா?
- ஹேய், காரிலேயே இரு.
269
00:19:53,943 --> 00:19:56,613
ஹேய், நண்பா, இங்கே வா.
உனக்கு ஒன்று இருக்கு.
270
00:19:57,071 --> 00:19:58,615
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
271
00:20:22,597 --> 00:20:25,600
உனக்கு மூளை நரம்பு வெடிக்க
போகுது, அது தெரியும்ல?
272
00:20:25,600 --> 00:20:27,226
உலகம் பாழாயிடுச்சு.
273
00:20:27,769 --> 00:20:32,857
இந்தாங்க, சார். சரி. அது $10.
274
00:20:32,857 --> 00:20:34,275
இந்தாங்க.
275
00:20:34,275 --> 00:20:35,485
சரி.
276
00:20:37,320 --> 00:20:39,822
அது அவன்தான். அவ கூட இருந்த ஆள்.
277
00:20:39,989 --> 00:20:42,283
நான் அருகிலிருந்து பார்க்க போறேன்.
278
00:21:03,846 --> 00:21:04,931
ப்ளூ ஜீப் செரோகி.
279
00:21:05,473 --> 00:21:07,850
- க்ளாசிக்.
- க்ளாசிக் கேடுகெட்டவன்.
280
00:21:08,017 --> 00:21:08,935
கலெக்டர்ஸ் ஐடம்.
281
00:21:08,935 --> 00:21:12,689
உனக்கு மயக்கம்னா, கேடுகெட்டவனை நீ பாரு,
வக்கீலை நான் கவனிக்கிறேன்.
282
00:21:47,140 --> 00:21:50,059
உடல்களை நாம கண்ட
கொள்கலனின் திட்டவட்டங்கள்.
283
00:21:50,059 --> 00:21:52,895
அதை ரோஸ் & அசோஸியேட்ஸோட இணைக்கலாம்.
284
00:21:54,272 --> 00:21:57,650
பாஷும் சாண்ட்லரும் ஒரே நேரத்தில்
துறைமுகத்தில் இருந்தாங்க.
285
00:21:57,650 --> 00:22:01,654
- பாஷும் அவன் ஆட்களும் பைப்லைனில்.
- அதை இன்னும் நிரூபிக்கணும்.
286
00:22:03,364 --> 00:22:07,618
- தேடல் ஆணைக்கு போதுமானது.
- போதாது, ஆனால் கிட்டே வர்றோம்.
287
00:22:08,327 --> 00:22:12,206
சாண்ட்லர், அவ ராஜர்ஸை
ரஷ்ஷியர்களிடம் தந்தாங்க.
288
00:22:18,254 --> 00:22:21,966
ஹேய், எப்படி இருக்கே.
ஸ்காட்ச் ஐஸோட.
289
00:22:33,019 --> 00:22:33,936
ஸ்காட்ச், நீட்.
290
00:22:48,910 --> 00:22:50,703
- எங்கிருக்கே?
- தொலைவில் இல்லை.
291
00:22:50,953 --> 00:22:53,122
சன்செட் ப்ளாஸாவுக்கு மேலே
ஹாலிவுட் ஹில்ஸ்.
292
00:22:53,247 --> 00:22:55,541
- துப்பாக்கி வெச்சிருக்கான்.
- நானும்தான்.
293
00:24:01,524 --> 00:24:02,817
சரி, மேடம்.
294
00:24:26,924 --> 00:24:29,886
- என்ன இருக்கு?
- அவன் பெயர் ஹைரோனிமஸ் பாஷ்.
295
00:24:29,886 --> 00:24:31,637
அது எந்த வகை பெயர்? டச்சா?
296
00:24:31,637 --> 00:24:33,681
- இப்ப எங்கே இருக்கே?
- நான் திரும்பறேன்.
297
00:24:33,681 --> 00:24:35,933
- அவளை பார்க்கறியா?
- அவ பில் கேட்டா.
298
00:24:35,933 --> 00:24:37,226
வெளியில் காத்திருக்கேன்.
299
00:25:32,907 --> 00:25:35,159
- சே! போ, போ!
- அவ எங்கே?
300
00:25:35,493 --> 00:25:39,038
- கருப்பு மெர்சேடிஸ்.
- அவளை பார்க்கிறேன்.
301
00:26:00,893 --> 00:26:02,395
911. உங்க அவசரம் என்ன?
302
00:26:02,395 --> 00:26:06,774
ஆமாம், மேடம். ஒரு பெண் இருக்காங்க,
குடிச்சிட்டு வண்டி ஓட்டறாங்க, சாலையில்
303
00:26:07,108 --> 00:26:09,860
ஏறுமாறாக, அவங்க யாரையும்
கொல்வாங்கன்னு பயப்படறேன்.
304
00:26:09,860 --> 00:26:11,404
உங்க இடம் எது, சார்?
305
00:26:11,612 --> 00:26:14,824
கோவரில் தெற்கே, மெல்ரோஸை நெருங்கி.
306
00:26:14,824 --> 00:26:16,909
மீண்டும். தெற்கை நோக்கியா?
307
00:26:17,076 --> 00:26:19,745
இப்ப, மெல்ரோஸில் மேற்கே.
308
00:26:19,870 --> 00:26:21,455
வாகனத்தை விவரிக்க முடியுமா?
309
00:26:21,455 --> 00:26:23,749
ஆமாம், அது கருப்பு மெர்சேடிஸ்.
310
00:26:23,749 --> 00:26:27,128
சே! அவங்க ஒரு காரை இடிச்சிருப்பாங்க.
கட்டுப்பாடே இல்லை.
311
00:26:27,795 --> 00:26:30,923
லார்ச்மான்டில் இடதுபுறம் திரும்பறாங்க.
312
00:26:35,845 --> 00:26:36,804
ஒரு நொடி, சார்.
313
00:26:56,991 --> 00:26:58,993
ஹாலிவுட் பிரிவுகள் 6ஏ67.
314
00:26:59,118 --> 00:27:03,372
லார்ச்மான்டில் தெற்கு நோக்கி போகும்
குடித்த ஓட்டுனரை குடிமகன் தொடர்கிறார்.
315
00:27:03,372 --> 00:27:05,708
வாகனம் கருப்பு மெர்சேடிஸாம்.
316
00:27:13,591 --> 00:27:15,051
ஹனி? என்ன பிரச்சினை?
317
00:27:15,051 --> 00:27:18,888
மார்டின், வீட்டில் தொந்தரவு செய்ய
மன்னிக்கணும், ஆனால் ஒரு பிரச்சினை.
318
00:27:21,515 --> 00:27:23,684
லார்ச்மான்டில் கோட் 6ல் இருக்கோம்.
319
00:27:24,101 --> 00:27:25,269
கருப்பு மெர்சேடிஸ்,
320
00:27:25,269 --> 00:27:29,398
உரிம எண் 3-யங்-ஆடம்-மேரி-543.
321
00:27:56,801 --> 00:27:57,927
இது எதைப்பற்றி?
322
00:27:58,052 --> 00:28:01,472
மேடம், இப்படி ஓரமா வந்து நில்லுங்க.
323
00:28:01,472 --> 00:28:03,432
என்னை ஏன் நிறுத்தினீங்க?
324
00:28:03,432 --> 00:28:05,309
ஓரமா வந்து நில்லுங்க. ப்ளீஸ்.
325
00:28:05,518 --> 00:28:07,436
உரிமம், பதிவு.
326
00:28:07,436 --> 00:28:09,563
- காரில் இருக்கு.
- கதவுகள் பூட்டியிருக்கு.
327
00:28:09,563 --> 00:28:12,400
- சாவி?
- என்ன நடக்குதுன்னு சொல்லும்வரை எந்த
328
00:28:12,400 --> 00:28:14,193
கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன்.
329
00:28:14,193 --> 00:28:16,862
நீங்க சாலையில் ஏறுமாறாக வாகனம் ஓட்டினதா
330
00:28:16,862 --> 00:28:19,365
ஒரு புகார், நீங்க குடிச்சிருக்கீங்க.
331
00:28:19,365 --> 00:28:21,534
ஏறுமாறா ஓட்டலை. அது அபத்தம்.
332
00:28:21,534 --> 00:28:23,786
- எங்கிருந்து?
- மூஸோ & ஃப்ராங்கிலிருந்து.
333
00:28:23,786 --> 00:28:26,038
- ஏறுமாறா ஓட்டினேனா?
- எவ்வளவு குடிச்சீங்க?
334
00:28:26,038 --> 00:28:29,333
இரண்டு க்ளாஸ் வைன்.
ஓட்டுவதை பாதிக்கும் அளவில்லை.
335
00:28:29,333 --> 00:28:31,335
அதை நாங்க முடிவு செய்யணும்.
336
00:28:32,503 --> 00:28:35,297
நீங்க கள தெளிவு சோதனைக்கு உட்பட
தயாரா இருக்கீங்களா?
337
00:28:35,297 --> 00:28:37,800
- பலூனில் ஊதுவதா?
- அப்படி அழைக்கணும்னா.
338
00:28:37,800 --> 00:28:39,760
நான் குடிக்கலை, சமநிலை இழக்கலை.
339
00:28:39,760 --> 00:28:41,971
நீங்க கள தெளிவு சோதனையை மறுக்கறீங்களா?
340
00:28:41,971 --> 00:28:44,223
முற்றிலும் மறுக்கறேன்.
341
00:28:44,223 --> 00:28:46,725
உங்களை காவலில் வைக்க வேண்டிய கட்டாயம்.
342
00:28:46,725 --> 00:28:48,352
தேவையில்லாத நிறுத்தத்திற்கா?
343
00:28:51,439 --> 00:28:53,023
கைகளை பின்னால கட்டுங்க.
344
00:28:53,149 --> 00:28:56,277
நீங்க விளையாடறீங்கன்னு நினைக்கிறேன்.
345
00:28:56,277 --> 00:28:57,695
உங்க பர்ஸை எடுக்கிறேன்.
346
00:29:01,115 --> 00:29:02,783
கேடுகெட்டவங்களே.
347
00:29:03,242 --> 00:29:04,952
- என்ன அது?
- ஒன்றுமில்லை.
348
00:29:07,913 --> 00:29:09,790
இதை நீங்க எளிதாக்கி இருக்கலாம்.
349
00:29:09,790 --> 00:29:12,918
ஏன் என்னை தொந்தரவு
செய்யறீங்கன்னு சொல்லலாம்.
350
00:29:13,085 --> 00:29:13,919
பிடிச்சாச்சு.
351
00:29:18,299 --> 00:29:21,635
பட்ரோல் அவங்களை நிலையம் கூட்டி போகும்.
டோவுக்கு இருப்போம்.
352
00:29:21,760 --> 00:29:23,471
- அங்கே சந்திப்போம்.
- எனக்கு சரி.
353
00:30:03,135 --> 00:30:04,053
கிடைச்சுது.
354
00:30:16,148 --> 00:30:17,316
சபாஷ்.
355
00:30:53,644 --> 00:30:55,020
என்ன காரணம், கௌன்செலர்?
356
00:30:55,020 --> 00:30:57,690
எனக்கும் தெரியணும்.
இரவு முழுக்க இருந்தேன்.
357
00:30:57,690 --> 00:31:00,192
டியுஐ? நீங்க குடிச்சிருந்தீங்களா?
358
00:31:00,317 --> 00:31:02,069
சோதனையை மறுத்தேன்.
359
00:31:02,486 --> 00:31:05,781
- ஏன் எடுக்கலை?
- எனக்கு பாதிப்பில்லை.
360
00:31:06,198 --> 00:31:09,493
மாஜியை நினைவுபடுத்தறீங்க.
தவறா புரியப்படுவாங்க, தவறிருக்காது.
361
00:31:09,618 --> 00:31:11,579
அது துன்புறுத்தல்.
362
00:31:11,579 --> 00:31:14,415
- ரத்தம் எடுத்தாங்களா?
- ஆட்சேபணையை மீறி.
363
00:31:14,623 --> 00:31:19,336
சரி. என்ன கண்டுபிடிக்க முடியும்னு
பார்க்கிறேன், சரியா?
364
00:31:19,336 --> 00:31:21,505
இதற்கிடையில் ஏதாவது வாங்கி வரவா?
365
00:31:21,505 --> 00:31:23,591
சாக்லேட் க்ராசான்டும், டயட் கோக்கும்.
366
00:31:25,926 --> 00:31:27,886
என் தோழிக்கு வாந்தியெடுக்க பை.
367
00:31:28,137 --> 00:31:31,599
ஆமாம். சரி. என்ன செய்ய முடியும்னு
பார்க்கிறேன்.
368
00:31:32,683 --> 00:31:34,435
என்ன தெரியுமா? என்னோட வாங்க.
369
00:31:34,643 --> 00:31:36,478
இங்கிருந்து வெளியே போவோம்.
370
00:31:36,478 --> 00:31:39,064
இந்த வழியா போவோம்.
371
00:31:39,940 --> 00:31:44,111
இதை சரி பண்ணும் போது நீங்க உட்காரலாம்.
372
00:31:44,778 --> 00:31:45,946
நன்றி.
373
00:31:45,946 --> 00:31:48,949
நான் திரும்பும் வரை சத்தியமா
ஓட மாட்டீங்களே?
374
00:31:48,949 --> 00:31:49,908
சத்தியமா.
375
00:31:49,908 --> 00:31:53,329
- சரி. நியாயத்துக்கு கட்டுப்பட்டு இருங்க.
- சரி.
376
00:32:02,671 --> 00:32:05,924
திரு. பாஷ். மார்டின் ரோஸ்,
ரோஸ் & அசோசியேட்ஸ்.
377
00:32:06,425 --> 00:32:07,593
சந்திக்க மகிழ்ச்சி.
378
00:32:07,593 --> 00:32:10,054
- உங்களை பற்றி கேள்விபட்டிருக்கேன்.
- நானும்.
379
00:32:11,013 --> 00:32:12,431
- போகலாமா?
- வழி காட்டுங்க.
380
00:32:12,431 --> 00:32:13,432
சரி.
381
00:32:27,863 --> 00:32:28,739
யார் இது?
382
00:32:28,739 --> 00:32:32,910
இது ஹாரி பாஷ். உன் வழக்கை
பார்க்கும் விசாரணையாளர்.
383
00:32:39,750 --> 00:32:42,252
- மிஸ் சாண்ட்லர் எங்கே?
- நீதி மன்றத்தில்.
384
00:32:47,466 --> 00:32:49,802
உனக்கு ஒண்ணு காட்ட நினைச்சேன்.
385
00:32:55,933 --> 00:32:56,975
இது யார்னு தெரியுமா?
386
00:32:59,812 --> 00:33:01,563
- லெக்ஸி பார்க்ஸ்.
- அது சரி.
387
00:33:02,523 --> 00:33:05,943
கொலையாகி, பிறகு கற்பழிக்கப்பட்டார்.
388
00:33:10,072 --> 00:33:13,158
உன் நண்பன், ஜேம்ஸ் ஆலன்.
389
00:33:14,284 --> 00:33:18,497
போதை, கொள்ளை, அழைப்பு.
390
00:33:18,497 --> 00:33:21,542
- என் அலிபியை உறுதி செய்தானா?
- இனி அவனால் உதவ முடியாது.
391
00:33:21,542 --> 00:33:22,876
ஜேம்ஸ் ஆலன் இறந்துட்டான்.
392
00:33:25,087 --> 00:33:26,672
- என்ன?
- கழுத்து நெறிபட்டு.
393
00:33:26,672 --> 00:33:29,133
அவன் உடல் ஹாலிவுட்டில் சந்தில் கிடந்தது.
394
00:33:31,552 --> 00:33:33,637
உன் மனைவி, வக்கீலிடம் பொய் சொன்னே.
395
00:33:33,762 --> 00:33:37,558
என்னிடம் பொய் சொன்னா, கிளம்பி
போயிட்டே இருப்பேன், புரியுதா?
396
00:33:45,065 --> 00:33:46,567
எல்லாத்தையும் சொல்லிட்டேன்.
397
00:33:48,110 --> 00:33:49,027
சரி.
398
00:33:53,532 --> 00:33:54,783
இது லாயக்கு படாது.
399
00:33:56,660 --> 00:34:00,038
நேரம் வீண். திரு. ரோஸ், போகலாம்.
400
00:34:02,416 --> 00:34:03,459
இருங்க.
401
00:34:05,169 --> 00:34:06,003
இருங்க.
402
00:34:17,848 --> 00:34:20,267
அவன் என் டீலர் மட்டுமில்லை.
403
00:34:24,521 --> 00:34:25,522
உறவிலிருந்தோம்.
404
00:34:29,276 --> 00:34:30,569
எத்தனை காலமா?
405
00:34:32,446 --> 00:34:33,322
ஆறு மாதங்கள்.
406
00:34:33,655 --> 00:34:37,367
அதை சொல்லியிருக்கணும்,
டேவிட், முதலிலிருந்தே.
407
00:34:37,534 --> 00:34:42,998
என்ன, இருக்கிற கொஞ்ச
வாழ்க்கையையும் தொலைக்கவா?
408
00:34:46,960 --> 00:34:47,878
ப்ளீஸ்.
409
00:34:50,297 --> 00:34:51,715
குடும்பத்தை இழக்க முடியாது.
410
00:35:03,560 --> 00:35:07,314
சொல்லவே வேண்டாம்.
எங்க உறவை பற்றி யாருக்கும் தெரிஞ்சா...
411
00:35:08,690 --> 00:35:10,567
யாரிடமும் சொல்ல நினைக்கலை.
412
00:35:10,567 --> 00:35:13,403
நானும் இல்லை. ஆனால் சேர்ந்து வாழறோம்.
413
00:35:13,529 --> 00:35:15,239
நான் வீடு தேடும் வரை.
414
00:35:17,074 --> 00:35:19,368
வாஸ்கெஸ்? அவளுக்கு தெரியுமா?
415
00:35:20,118 --> 00:35:22,287
அவ குருடில்லை. நிச்சயமா தெரியும்.
416
00:35:22,287 --> 00:35:24,039
அவளுக்கு பரவாயில்லையா?
417
00:35:24,039 --> 00:35:28,252
ஆமாம், தனி வாழ்க்கை,
தொழில் வாழ்க்கையில் தலையிடாதவரை.
418
00:35:34,091 --> 00:35:36,593
- பார்ப்போம்.
- என்னை பார்க்காதே.
419
00:35:44,852 --> 00:35:46,520
சாதாரண உடைகளில் இருந்தாங்க.
420
00:35:46,520 --> 00:35:49,064
- அவங்க பெயர்களை எடுத்தியா?
- இல்லை.
421
00:35:49,064 --> 00:35:52,401
யார் கூட்டிட்டு வந்து பதிவு செய்தாங்கன்னு
பார்த்து பேசறேன்.
422
00:35:54,945 --> 00:35:57,114
எவ்வளவு குடிச்சே?
423
00:35:57,239 --> 00:36:00,826
நீ போன பிறகு ஒரு கிளாஸ்.
ஃபாஸ்டரோட எப்படி போச்சு?
424
00:36:02,077 --> 00:36:06,206
அன்றிரவு ஆலனோட இருந்தானாம்.
போதை மருந்தைவிட அதிகமா செய்தபடி.
425
00:36:06,331 --> 00:36:09,334
- ஒரு இரவா?
- கடந்த ஆறு மாதங்களா.
426
00:36:10,335 --> 00:36:13,589
- அன்றிரவு எங்கிருந்தாங்க?
- சான்டா மானிகா மோட்டலில்.
427
00:36:13,589 --> 00:36:16,383
ஆலன் அங்கே ஒரு அறையிலிருந்து
வேலை செய்தான்.
428
00:36:16,508 --> 00:36:18,677
சிறப்பு. மீண்டும் பொய் சொன்னான்.
429
00:36:19,928 --> 00:36:21,555
எல்லாரும் கணக்கில் வருவாங்க.
430
00:36:21,680 --> 00:36:24,474
- டேவிட் ஃபாஸ்டர் கூட.
- இப்ப, அவனை நம்பறியா?
431
00:36:26,101 --> 00:36:27,185
கிட்டத்தட்ட.
432
00:36:32,190 --> 00:36:34,526
- இந்தாங்க.
- இந்த சாவி எப்படி கிடைச்சுது?
433
00:36:35,235 --> 00:36:37,654
வாகனம் ஓஓஏ. ஓபன் ஆன் அரைவல்.
434
00:36:37,654 --> 00:36:39,239
இல்லை, கார் பூட்டியிருந்தது.
435
00:36:39,239 --> 00:36:42,326
நீங்க புகார் செய்ய நினைச்சா,
நான் ஆவணங்களை தர்றேன்.
436
00:36:42,451 --> 00:36:44,328
என் கார் எங்கேன்னு காட்டுங்க.
437
00:36:44,870 --> 00:36:45,787
இடம் 20.
438
00:37:02,471 --> 00:37:03,680
எல்லாம் சரியா இருக்கா?
439
00:37:04,556 --> 00:37:08,852
ஃபாஸ்டர் கோப்பு முன்னால இருந்தது,
இப்ப, கடைசியிலிருந்து இரண்டாவது.
440
00:37:10,103 --> 00:37:13,190
- நிறைய குடிச்சிருந்திருக்கே.
- நாசமா போ.
441
00:37:13,190 --> 00:37:15,943
என் காரை நான் உதிரி சாவியால பூட்டினேன்.
442
00:37:16,985 --> 00:37:19,404
டோ ஆள் திறந்திருக்கலாம்.
443
00:37:19,529 --> 00:37:22,783
பாரு, நாம ஃபாஸ்டர் மீது கவனமா இருக்கணும்.
444
00:37:22,783 --> 00:37:24,117
அடுத்தது என்ன செய்யணும்?
445
00:37:24,368 --> 00:37:27,788
லேப் இறுதியா பதிவை மேம்படுத்தியிருக்காங்க.
446
00:37:30,958 --> 00:37:34,503
இதை பாரு. பகுதியிலிருந்து வீடியோ.
447
00:37:34,670 --> 00:37:36,463
நீண்ட காலமாச்சு.
448
00:37:36,463 --> 00:37:39,341
சைமன் வேக்ஃபீல்ட் வீடு, கொலை நடந்த நாள்.
449
00:37:40,926 --> 00:37:43,136
இதோ சாண்ட்லர்.
450
00:37:43,136 --> 00:37:47,140
சரி. பிரேத பரிசோதனையாளர் மரண நேரத்தை,
முன் பிற்பகல் என்றார்.
451
00:37:47,140 --> 00:37:49,810
சாண்ட்லர் வந்த நேரமோ 4:30.
452
00:37:49,810 --> 00:37:52,479
அவர் நீச்சல் குளத்தில்
குப்புற மிதந்திருப்பார்.
453
00:37:52,479 --> 00:37:53,855
அவள் அதை புகார் செய்யலை.
454
00:37:53,855 --> 00:37:57,734
அவர் மூழ்கி இருந்தது அவளுக்கு
தெரியாமல் இருந்திருக்கலாம்.
455
00:37:59,111 --> 00:38:00,988
அவங்க ரேகை குள ஸ்கிம்மரில் இருந்தது.
456
00:38:00,988 --> 00:38:04,992
- குளத்திலிருந்து அவர் ஃபோனை எடுத்தாங்க.
- ஃபோன் கிடைக்கவே இல்லை.
457
00:38:04,992 --> 00:38:06,326
அது அதை விளக்கும்.
458
00:38:06,326 --> 00:38:09,037
- திட்டவட்டத்தை ராமிரெஸால் பதிவிறக்கம்.
- சரி.
459
00:38:10,372 --> 00:38:11,540
இது என்னது?
460
00:38:11,540 --> 00:38:16,837
அதே நாள் வேக்ஃபீல்ட் வீடு. சாண்ட்லர்
வரும் ஒரு மணி நேரம் முன்பு.
461
00:38:17,963 --> 00:38:19,881
அது யாரைப்போல இருக்கு?
462
00:38:21,508 --> 00:38:23,135
லெவ் இவானவிச்.
463
00:38:23,468 --> 00:38:26,138
டாட்ஸ், ராஜர்ஸ், கேடிங், வேக்ஃபீல்ட்.
464
00:38:26,722 --> 00:38:28,390
ரஷ்ஷியர்கள் தொலைவில்.
465
00:38:30,392 --> 00:38:32,144
சாண்ட்லர் இல்லை.
466
00:38:35,689 --> 00:38:37,399
பாஷ்: லெகஸியில் அடுத்த முறை...
467
00:38:37,399 --> 00:38:41,194
துறையில் அத்தனை வருடம்,
இப்ப பெண் வக்கீலுக்கு உதவியாள்.
468
00:38:41,194 --> 00:38:43,155
இருண்ட பக்க டைனோசார்.
469
00:38:44,698 --> 00:38:47,701
உயர்தர கடிகார பெட்டி,
இடது மணிகட்டில் டேன் கோடு.
470
00:38:47,701 --> 00:38:53,040
- நீ உறவில் இருக்கியா?
- அது வந்து... அது பெரிய கதை.
471
00:38:55,417 --> 00:38:57,169
- முடிஞ்சுதா?
- இன்னும் முடியலை.
472
00:38:57,377 --> 00:39:00,130
- க்ரூவில் ஒரு பணி ஏற்றேன்.
- நீ தயாரா?
473
00:39:00,130 --> 00:39:02,549
பாஷும் நானும் சுற்றுலா
பயணிகள் போலிருப்போம்,
474
00:39:02,674 --> 00:39:06,845
எங்களை ஏமாற்ற நினைக்கும் மோசமான
நடிகர்களை கண்டுக்காமல் சுற்றி பார்ப்போம்.
475
00:39:07,554 --> 00:39:08,847
ஃப்ரீஸ்!
476
00:39:08,847 --> 00:39:11,141
உங்க பைப்லைனை நீங்க வெடித்ததா
நாங்க நம்பலை.
477
00:39:11,141 --> 00:39:13,560
எங்களுக்கு உதவி உங்களுக்கே உதவிக்கலாம்.
478
00:39:14,811 --> 00:39:17,564
- என்ன அவசரம்?
- நமக்கு ஒரு பிரச்சினை.
479
00:39:17,731 --> 00:39:19,816
வேக்ஃபீல்ட் வழக்கை ஃபெட்ஸ்
எடுத்துட்டாங்க.
480
00:40:40,939 --> 00:40:42,941
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்
481
00:40:42,941 --> 00:40:45,026
{\an8}படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்