1 00:00:08,884 --> 00:00:10,844 கவுண்டி அவசர மேலாண்மை நிறுவனத்தின் 2 00:00:10,928 --> 00:00:14,640 வேண்டுகோளின் பேரில் பின்வரும் செய்தி ஒளிபரப்பப்படுகிறது. 3 00:00:14,723 --> 00:00:16,225 பின்வரும் குடி வெளியேற்ற ஆணை... 4 00:00:16,308 --> 00:00:18,352 நாம் மருத்துவமனைக்குப் போகிறோமா? 5 00:00:18,435 --> 00:00:21,396 -...ஆல்பெனி கவுண்டி, அலேகெனி கவுண்டி... -செல்லம், ஒன்றுமில்லை. நமக்கொன்றுமில்லை. 6 00:00:22,481 --> 00:00:23,482 கொஞ்சம்... 7 00:00:24,691 --> 00:00:26,318 கொஞ்சம் இரத்தம் அவ்வளவுதான். 8 00:00:29,571 --> 00:00:31,406 அங்கே இருந்தது என்ன? 9 00:00:32,658 --> 00:00:35,035 அது என்ன அரக்கனா? 10 00:00:35,994 --> 00:00:37,204 அது அரக்கன் அல்ல. 11 00:00:38,539 --> 00:00:39,540 அது... 12 00:00:41,792 --> 00:00:43,085 ஏதோவொன்று. 13 00:00:49,132 --> 00:00:51,301 லூக், செல்லம், இது எங்கிருந்து கிடைத்தது? 14 00:00:54,972 --> 00:00:57,474 -லூக், என்ன இது? -எனக்குத் தெரியாது. இதை கண்டெடுத்தேன். 15 00:00:57,558 --> 00:00:58,767 எங்கிருந்து? 16 00:01:00,894 --> 00:01:02,062 அப்பா? 17 00:01:02,145 --> 00:01:04,857 -அப்பா? அப்பா! -அப்பா! 18 00:03:30,460 --> 00:03:31,962 ச்சே. 19 00:03:37,551 --> 00:03:38,552 ஹலோ? 20 00:03:57,446 --> 00:03:58,739 என்ன கொடுமை இது? 21 00:03:59,239 --> 00:04:00,616 ஓ, அடச்சே. 22 00:04:37,945 --> 00:04:39,780 கைகளை உயர்த்துங்கள்! 23 00:04:40,697 --> 00:04:42,282 குழந்தைகளின் கைகளையும் உயர்த்துங்கள்! 24 00:04:43,408 --> 00:04:45,244 அந்த குழந்தைகளிடம் சொல்! 25 00:04:46,036 --> 00:04:48,205 உன் சட்டையை மேலே தூக்கு. மேலே தூக்கு! 26 00:04:48,288 --> 00:04:50,165 உன் சட்டையை மேலே தூக்கு! 27 00:04:51,166 --> 00:04:53,210 -திரும்பு! -நான் ஆங்கிலம் பேசுவேன். 28 00:04:53,293 --> 00:04:54,586 நாங்கள் ஆபத்தானவர்கள் அல்ல. 29 00:04:55,337 --> 00:04:56,755 நீங்கள் தனியாக இருக்கிறீர்களா? 30 00:04:58,298 --> 00:04:59,758 இங்கே என்ன நடந்தது என்று தெரியுமா? 31 00:04:59,842 --> 00:05:00,884 இறப்பு. அதேதான். 32 00:05:00,968 --> 00:05:02,344 அதே என்றால்? எதைப் போல? 33 00:05:04,054 --> 00:05:06,306 பீரங்கிகள் தீப்பற்றி எரிந்தன. ஹெலிகாப்டர்களும் தான். 34 00:05:06,390 --> 00:05:07,891 -நீ என்ன சொல்கிறாய்? -மோசமான யுத்தம். 35 00:05:08,475 --> 00:05:11,311 உன் முகாமில் துப்பாக்கிச் சூடு நடந்தது. பின் விளைவுகளைத்தான் பார்த்தேன். 36 00:05:11,395 --> 00:05:13,105 நான் போகும் இடம் குறித்து பேசுகிறாயா? கேம்ப் டிராவிஸ்? 37 00:05:13,981 --> 00:05:16,316 அவை கூட்டு படைகள், ஜெர்மானியர்கள் மற்றும் கனடியர்கள். 38 00:05:16,900 --> 00:05:18,902 இறந்துவிட்டனர்... அவர்களைப் போலவே. 39 00:05:18,986 --> 00:05:22,155 இல்லை. இல்லை. 40 00:05:25,909 --> 00:05:29,329 அங்குதான் போகிறேன். அங்கே ஆயிரக்கணக்கான வீரர்களும் ஒரு விமான தளமும் இருக்கிறது. 41 00:05:29,413 --> 00:05:32,291 இனி கிடையாது. விமானங்கள் தீப்பற்றி எரிகின்றன. 42 00:05:39,339 --> 00:05:40,340 தயவுசெய்து. 43 00:05:42,885 --> 00:05:43,886 மெதுவாக. 44 00:05:55,689 --> 00:05:56,690 சரி. 45 00:06:12,873 --> 00:06:15,209 -நீ விமானத்தைத் தேடுகிறாயா? -ஆம். 46 00:06:15,292 --> 00:06:18,462 அப்போது எங்களைப் போல காபூலுக்குச் செல்லலாம். 47 00:06:18,545 --> 00:06:21,590 எனக்கு காபூல் குறித்து தெரியும், அங்கு இன்னும், விமானங்கள் இருக்கின்றன. 48 00:06:21,673 --> 00:06:22,674 உனக்குத் தெரியுமா? 49 00:06:23,383 --> 00:06:24,885 ஆம் அப்படித்தான் நினைக்கிறேன். 50 00:06:25,427 --> 00:06:27,888 நாங்கள் காபூலுக்கு நடந்து போகிறோம். 51 00:06:29,515 --> 00:06:33,268 உனக்கு... அது, 200 மைல்களுக்கு மேல் இருக்கும்தானே? 52 00:06:34,520 --> 00:06:36,396 நாங்கள் 200 மைல்கள் நடப்போம். 53 00:06:48,492 --> 00:06:49,618 இது செயலிழந்துவிட்டது. 54 00:06:50,953 --> 00:06:53,372 நம்மிடம் கைபேசிகள், மின்சாரம், மக்கள் எதுவும் இல்லை. 55 00:06:56,041 --> 00:06:59,419 தீவிரவாதிகள், அவர்கள் எல்லோரையும் கொன்று இருப்பார்கள். 56 00:07:00,254 --> 00:07:03,549 நாம் மற்றவர்களோடு இருந்திருக்க வேண்டும். 57 00:07:03,632 --> 00:07:06,802 அவர்களுக்கு இப்போது உதவி கிடைத்திருக்கலாம். 58 00:07:08,220 --> 00:07:09,596 அல்லது இறந்திருக்கலாம். 59 00:07:09,680 --> 00:07:11,098 நீரிழிவு நோயால் இருக்கும். 60 00:07:18,230 --> 00:07:19,231 ஹேய்! 61 00:07:28,448 --> 00:07:29,408 ஹேய்! 62 00:07:30,742 --> 00:07:32,828 -ஹேய்! -நல்லது நடக்கிறது, இல்லையா? 63 00:07:32,911 --> 00:07:34,621 -ஹேய்! 64 00:07:35,122 --> 00:07:36,623 -நிறுத்துங்கள்! -நிறுத்துங்கள்! 65 00:07:38,667 --> 00:07:41,378 -காஸ்பர், நீ என்ன செய்கிறாய்? -காஸ்ப், நகரு! 66 00:07:53,140 --> 00:07:54,600 உனக்கு என்ன பைத்தியமா? 67 00:07:56,310 --> 00:07:59,771 இங்கே என்ன செய்கிறீர்கள், எல்லோரும், தனியாக? 68 00:08:02,274 --> 00:08:03,400 எங்களுக்கு உதவி தேவை. 69 00:08:05,319 --> 00:08:06,945 நாங்கள் வீடு திரும்ப வேண்டும். 70 00:08:08,739 --> 00:08:09,740 எந்த வீட்டிற்கு? 71 00:08:13,410 --> 00:08:15,287 லண்டன். இந்த பக்கம். 72 00:08:18,749 --> 00:08:20,292 நான் அந்த பக்கம் திரும்பி வர மாட்டேன். 73 00:08:21,668 --> 00:08:23,086 பொறுங்கள், காயம் ஏற்பட்டுள்ளதா? 74 00:08:37,601 --> 00:08:38,809 என்னுடையது அல்ல. 75 00:08:42,481 --> 00:08:43,649 என்ன நடந்தது? 76 00:08:46,485 --> 00:08:47,486 என் குடும்பம். 77 00:08:50,531 --> 00:08:51,532 நீல். 78 00:08:54,701 --> 00:08:56,036 ஜான், எங்கள் மகன். 79 00:08:58,413 --> 00:08:59,414 எங்கள் நாய். 80 00:09:02,626 --> 00:09:03,919 அது அவர்கள் எல்லோரையும் கொன்றுவிட்டது. 81 00:09:06,880 --> 00:09:08,215 "அதுவா"? 82 00:09:09,216 --> 00:09:10,926 "அது" என்றால் என்ன அர்த்தம்? 83 00:09:13,887 --> 00:09:14,888 உங்களுக்கு... 84 00:09:17,266 --> 00:09:18,433 உங்களுக்குத் தெரியாதா? 85 00:09:21,770 --> 00:09:22,896 தீவிரவாதிகள். 86 00:09:25,649 --> 00:09:26,817 அது லண்டனில் நடந்ததா? 87 00:09:27,776 --> 00:09:28,777 சரியா? 88 00:09:32,906 --> 00:09:34,074 அது எங்கும் இருக்கிறது. 89 00:09:36,743 --> 00:09:37,870 என்ன அது? 90 00:09:40,414 --> 00:09:42,416 -அது தீவிரவாதிகள் அல்ல. -என்ன அது? 91 00:09:42,499 --> 00:09:43,792 ஏலியன்கள். 92 00:09:44,918 --> 00:09:47,337 -ஓ, நம்பமுடியவில்லை. -இவர் பொய் சொல்கிறார். 93 00:09:47,421 --> 00:09:49,047 நீங்கள் நிஜமாக சொல்லவில்லை தானே? 94 00:09:49,131 --> 00:09:50,465 நீங்கள் பொய் சொல்கிறீர்கள். 95 00:09:51,216 --> 00:09:53,468 நேற்று இரவு அமெரிக்க ஜனாதிபதி டிவியில் உரையாற்றினார். 96 00:09:54,303 --> 00:09:56,180 முதலில், அவை அங்கு மட்டுமே இருந்ததாக நினைத்தோம், 97 00:09:56,847 --> 00:09:58,557 பிறகு நகரங்களுக்குள், லண்டனில், 98 00:10:00,434 --> 00:10:02,269 ஆனால் எங்களுடையது சிறிய நகரம்... 99 00:10:04,605 --> 00:10:06,023 சில நூறு மக்களை கொண்டது. 100 00:10:14,698 --> 00:10:15,699 நாங்கள் தனியாக இருக்கிறோம். 101 00:10:18,160 --> 00:10:19,286 நாங்கள் தனியாக இருந்தோம். 102 00:10:22,623 --> 00:10:26,084 நாங்கள் லண்டனில் உள்ள எங்கள் குடும்பத்திடம் செல்ல வேண்டும். 103 00:10:28,170 --> 00:10:29,171 தயவுசெய்து. 104 00:10:32,633 --> 00:10:34,176 உங்களால் எதுவும் செய்ய முடியாதா? 105 00:10:37,137 --> 00:10:38,138 முடியாது. 106 00:10:45,896 --> 00:10:48,565 அவை சாலைகளில் நிறைய இருக்கும். 107 00:10:50,400 --> 00:10:52,194 இரைச்சலை நீக்குவது இதில் வேலை செய்யவில்லை. 108 00:10:52,277 --> 00:10:53,612 நான் செய்யும் எதுவும் வேலை செய்யாது. 109 00:10:53,695 --> 00:10:54,988 எனக்கு எதுவும் புரியவில்லை. 110 00:10:56,657 --> 00:10:57,699 வேகமாக. 111 00:10:58,909 --> 00:11:02,454 ஹேய். பார்த்தவுடன் நம்மை கைது செய்துவிடுவார்கள். 112 00:11:03,121 --> 00:11:04,248 நீ அதை உணர்ந்திருக்கிறாயா? 113 00:11:05,999 --> 00:11:07,000 நம்மிடம் அனுமதி இல்லை, 114 00:11:07,084 --> 00:11:10,629 அதோடு திருடிய கருவியை எடுத்துச் செல்கிறோம், இப்போது நாம்... 115 00:11:11,129 --> 00:11:12,130 மிட்சுகி. 116 00:11:12,714 --> 00:11:15,008 மிட்சுகி. 117 00:11:17,761 --> 00:11:20,681 நீ சொல்வது என்னை தடுக்கும் என்று நினைக்கிறாயா? 118 00:11:21,306 --> 00:11:22,641 அனுபவத்தின் அடிப்படையில்? 119 00:11:23,475 --> 00:11:26,186 -இல்லை. -அப்படியென்றால் பேசாமல் இரு. 120 00:11:26,270 --> 00:11:28,272 பிடிக்கவில்லை என்றால், இப்போதே காரை விட்டு இறங்கிவிடு. 121 00:11:33,527 --> 00:11:34,528 மிட்சுகி. 122 00:11:36,238 --> 00:11:38,448 திரு. ஹஷிமோடோ உன்னிடம் என்ன சொல்லியிருந்தாலும் சரி, 123 00:11:38,532 --> 00:11:40,284 இந்த ஒலிபரப்பில் எதுவும் இல்லை. 124 00:11:40,367 --> 00:11:41,827 இது சத்தம், அவ்வளவுதான். 125 00:11:42,411 --> 00:11:43,996 ஆனால் ஹோஷி-12 அழிந்துவிட்டது. 126 00:11:44,621 --> 00:11:47,749 தேவையில்லாமல் நாம் சிறைக்கு போகப்போகிறோம். 127 00:11:47,833 --> 00:11:50,043 ஒட்டுமொத்த குழுவும் இறந்துவிட்டது. 128 00:11:52,671 --> 00:11:54,339 என்னை மன்னித்துவிடு. 129 00:11:54,423 --> 00:11:56,550 -ஆனால்... -அவர்கள் இறக்கவில்லை. 130 00:11:58,135 --> 00:11:59,553 எனக்குத் தெரியும். 131 00:12:00,429 --> 00:12:01,930 உனக்கு கேட்கவில்லை என்றாலும் கூட, 132 00:12:02,014 --> 00:12:04,224 எனக்கு கேட்கிறது. 133 00:12:04,308 --> 00:12:06,268 இடத்தை அடைந்துவிட்டோம். 134 00:12:18,572 --> 00:12:19,948 என்ன? 135 00:12:20,032 --> 00:12:21,074 நாங்கள் JASA விலிருந்து வருகிறோம். 136 00:12:22,242 --> 00:12:23,744 அடையாள அட்டை இருக்கிறதா? 137 00:12:24,995 --> 00:12:29,041 மிட்சுகி யமடோ, தலைமை திட்ட வல்லுநர், SST சிஸ்டம்ஸ். 138 00:12:29,124 --> 00:12:32,002 செயல்பாட்டு தலைமை பொறுப்பை ஏற்க வந்துள்ளேன். 139 00:12:32,085 --> 00:12:33,587 உடனடியாக கதவைத் திற. 140 00:12:36,757 --> 00:12:38,884 "தலைமை திட்ட வல்லுநர்"? 141 00:12:38,967 --> 00:12:39,968 "SST சிஸ்டம்ஸ்"? 142 00:12:40,928 --> 00:12:42,054 இருபது நிமிடங்களுக்கு முன்பு, 143 00:12:42,137 --> 00:12:45,807 எல்லா அதிகாரத்தையும் மிட்சுகி யமடோவிடம் ஒப்படைக்குமாறு இயக்குனர் ஹாஷிமோட்டோ 144 00:12:45,891 --> 00:12:49,394 மற்றும் நிர்வாகி கூடா ஆகியோரின் உத்தரவு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது. 145 00:12:49,478 --> 00:12:52,814 அறுபது நொடிகளுக்குப் பிறகு, தலைமையகத்துடனான எல்லா தொடர்புகளையும் இந்த கட்டிடம் இழந்துவிட்டது. 146 00:12:52,898 --> 00:12:54,107 நீ என்ன செய்தாய்? 147 00:12:54,191 --> 00:12:55,943 குறிப்பாக எதுவுமில்லை. 148 00:12:59,821 --> 00:13:00,864 இல்லை. 149 00:13:00,948 --> 00:13:02,533 நம்மை கைது செய்ய போகிறார்கள். 150 00:13:04,701 --> 00:13:05,702 மிட்சுகி. 151 00:13:05,786 --> 00:13:07,663 நீ என்ன செய்ய நினைக்கிறாய்? 152 00:13:08,872 --> 00:13:10,249 எதிரியை தொடர்பு கொள்ள வேண்டும். 153 00:13:22,886 --> 00:13:24,054 அஹமது. 154 00:13:24,555 --> 00:13:26,849 அஹமது? எழுந்திரு, அஹமது. 155 00:13:52,332 --> 00:13:53,709 அடச்சே. 156 00:13:59,923 --> 00:14:01,967 அப்பா இறக்கப் போகிறாரா? 157 00:14:17,274 --> 00:14:18,734 -அம்மா அவரை காயப்படுத்துகிறார். -இல்லை. 158 00:14:41,715 --> 00:14:43,842 எழுந்திரு. 159 00:14:45,052 --> 00:14:49,973 -மூச்சுவிடு. -அப்பா! 160 00:14:50,849 --> 00:14:52,684 மூச்சு விடு, அடச்சே! 161 00:15:00,526 --> 00:15:01,902 ஓ, இல்லை. 162 00:15:36,520 --> 00:15:38,313 நீ என் உயிரை காப்பாற்றிவிட்டாய். 163 00:15:47,489 --> 00:15:48,907 நன்றி. 164 00:15:53,662 --> 00:15:55,038 பரவாயில்லை. 165 00:16:14,766 --> 00:16:16,059 என்ன நடக்கிறது? 166 00:16:20,022 --> 00:16:22,691 காபூல் செல்ல இரண்டு மணிநேரம் ஆகும். அளவாக குடிக்கச் சொல். 167 00:16:22,774 --> 00:16:24,401 -அவன் தாகமாக இருக்கிறான். -ஆம், தாகமாக இருக்கிறான். 168 00:16:24,484 --> 00:16:26,612 இரண்டு மணிநேரம் ஆகும். அவனை பொறுத்துக்கொள்ளச் சொல். 169 00:16:26,695 --> 00:16:28,030 அவனை பொறுமையாக இருக்கச் சொல். 170 00:16:45,214 --> 00:16:46,340 அது முட்டாள்தனமானது. 171 00:16:47,591 --> 00:16:51,136 ஆனால் அவனுக்கு அது தெரியாது. அவனுக்கு அது தெரிய தேவையில்லை. 172 00:16:52,346 --> 00:16:55,140 நான் அவனுக்கு உதவ முடிந்தால், அதைத்தான் நான் செய்ய வேண்டும். 173 00:16:55,766 --> 00:16:56,808 என்ன? 174 00:16:58,852 --> 00:17:01,855 சரி, ஒரு மணிநேரத்தில் அவனுக்கு தாகமெடுத்தால், அவனிடம் என்ன சொல்வாய்? 175 00:17:03,273 --> 00:17:05,526 கிட்டத்தட்ட வந்துவிட்டோம் என்று சொல்வேன். 176 00:17:06,359 --> 00:17:08,278 நம்பிக்கை என்பது தண்ணீர் போலத்தான். 177 00:17:24,336 --> 00:17:26,213 அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது, இல்லையா? 178 00:17:27,464 --> 00:17:28,464 அவர்களுக்குத் தெரியும். 179 00:17:30,092 --> 00:17:32,135 ஏலியன் ஆக்கிரமிப்பு நடந்துகொண்டிருக்கிறது 180 00:17:32,219 --> 00:17:35,681 என்று தெரிந்திருந்தும், அவர்கள் மிகவும் நிதானமாக இருக்கிறார்கள். 181 00:17:36,974 --> 00:17:40,477 தெரியுமா, சஹார், 2010 ல் தான் பிறந்தாள், 182 00:17:40,561 --> 00:17:42,813 ஆயுதங்களுடன் உங்கள் படைகள் வந்த இரண்டு ஆண்டுகளில். 183 00:17:43,397 --> 00:17:46,400 அலி, என் மகன், 2013 ல் பிறந்தான், 184 00:17:47,568 --> 00:17:51,488 பின்லேடனை கொன்று இரண்டு வருடத்திற்குப் பிறகு, 50,000 போர் வீரர்கள் இன்னும் இருக்கும் சமயத்தில். 185 00:17:52,322 --> 00:17:55,701 அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஆக்கிரமிப்பை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 186 00:17:55,784 --> 00:17:57,327 அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அதுதான். 187 00:17:58,328 --> 00:17:59,663 இது வித்தியாசமானது. 188 00:17:59,746 --> 00:18:01,248 நான் அதை கேட்டிருக்கிறேன். 189 00:18:08,839 --> 00:18:10,632 -உன் குழந்தைகளுக்கு என்ன வயது? -என்ன? 190 00:18:13,010 --> 00:18:14,136 உன் குழந்தைகளுக்கு என்ன வயது? 191 00:18:16,847 --> 00:18:19,016 ஒரு அப்பாவின் கண்களை அறிவேன் நான். 192 00:18:23,687 --> 00:18:25,564 அதனால்தான் வீட்டிற்கு போகிறாய், சரியா? 193 00:18:32,779 --> 00:18:34,072 திரு. யமடோ! 194 00:18:34,156 --> 00:18:35,616 வாருங்கள். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 195 00:18:35,699 --> 00:18:37,409 என் பெயர் யோஷி புஜிமோட்டோ. 196 00:18:40,579 --> 00:18:42,372 நாங்கள் இங்கிருந்தே பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அமெரிக்காவுடன் 197 00:18:42,456 --> 00:18:43,707 தரவைப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம், 198 00:18:44,541 --> 00:18:48,128 ஆனால் தரவு தொடர்ந்து சத்தமாக உள்ளது. 199 00:18:48,754 --> 00:18:51,798 ஆனால் உலகளாவிய தலைமை எல்லா 200 00:18:51,882 --> 00:18:54,009 தொலைநோக்கிகளையும் ஒரே திசையில் திருப்புமாறு கோரியுள்ளது. 201 00:18:54,092 --> 00:18:56,094 எங்களால் மிக விரிவான தகவல்களை பெற முடியவில்லை. 202 00:18:56,178 --> 00:18:57,846 உலகளாவிய தலைமை இதில் செய்வதற்கு எதுவும் இல்லை. 203 00:18:58,472 --> 00:19:00,057 நான்தான் தலைமை ஏற்றிருக்கிறேன். 204 00:19:01,016 --> 00:19:02,392 தொழில்நுட்ப நிபுணர் கவாகுச்சி. 205 00:19:04,770 --> 00:19:06,396 அவர்களுக்கு காட்டு. 206 00:19:08,315 --> 00:19:10,859 சரி, திட்ட மேற்பார்வையாளரே. 207 00:19:30,504 --> 00:19:32,339 என்ன இது? 208 00:19:35,717 --> 00:19:40,264 கட்டுப்பாடுகள் இல்லாமல் இதை உங்கள் லோக்கல் நெட்வொர்க்குடன் இணைத்திடுங்கள். 209 00:19:42,307 --> 00:19:47,980 யாரையும் விட நான்தான் அவளை அதிகமாக நேசித்தேன் என்று நினைத்தேன். 210 00:19:50,774 --> 00:19:51,775 திரு. புஜிமோட்டோ, 211 00:19:51,859 --> 00:19:55,529 இது மோதலுக்கு பிறகு கிடைத்த ஆடியோ. 212 00:19:55,612 --> 00:19:58,615 இது மோதலுக்கு பிறகு எதிரியிடமிருந்து கிடைத்த சமிக்ஞை. 213 00:19:58,699 --> 00:20:02,035 அந்த நிகழ்வின் ஒலி பகுப்பாய்வு செய்யப்பட்டு ஒளிக்கற்றையாக மாற்றப்பட்டது. 214 00:20:02,119 --> 00:20:06,707 இந்த சமிக்ஞையைக் கண்டுபிடிக்க தொலைநோக்கியை பயன்படுத்துங்கள். 215 00:20:07,291 --> 00:20:09,209 இது ஒரு ரேடியோ தொலைநோக்கி. 216 00:20:09,293 --> 00:20:10,878 இது விண்வெளி கற்களையும் நட்சத்திரங்களையும் தான் கண்டறியும். 217 00:20:10,961 --> 00:20:12,754 இது மின்காந்த கதிர்வீச்சு, வடிவங்களை 218 00:20:12,838 --> 00:20:13,922 கண்டறியும். 219 00:20:14,006 --> 00:20:15,382 இது ஒரு வடிவம், 220 00:20:15,465 --> 00:20:17,217 ஒரு செய்தி. 221 00:20:17,301 --> 00:20:20,262 எது இதை ஒளிபரப்புகிறது என்பதை நாம் கண்டுபிடித்து, 222 00:20:20,345 --> 00:20:21,972 அதற்கு பதில் செய்தி ஒன்றை அனுப்புவோம். 223 00:20:24,516 --> 00:20:27,311 யாருக்கு செய்தி அனுப்புவது? 224 00:20:28,437 --> 00:20:29,438 அவற்றுக்கு. 225 00:20:32,900 --> 00:20:34,026 அவற்றுக்கா? 226 00:20:56,548 --> 00:20:58,926 இங்கிருப்பது. பாதுகாப்பில்லை. அவை இங்கிருக்கின்றன. 227 00:20:59,009 --> 00:21:00,469 நீங்கள் என்னோடு இருக்கலாம். 228 00:21:01,178 --> 00:21:02,721 வீடு இங்குதான் இருக்கிறது. 229 00:21:02,804 --> 00:21:04,014 போகாதீர்கள். 230 00:21:05,641 --> 00:21:07,559 கிராமப்புறங்கள் பாதுகாப்பாக இருக்கும். 231 00:21:09,353 --> 00:21:10,562 அது உங்களுக்கு பாதுகாப்பாக இல்லையே. 232 00:21:21,490 --> 00:21:22,699 அதிர்ஷ்டம் உண்டாகட்டும். 233 00:21:23,534 --> 00:21:24,535 நன்றி. 234 00:21:34,127 --> 00:21:36,046 அடச்சே. அவர்கள் வெளியேறிய வழி இதுதான். 235 00:21:36,129 --> 00:21:37,673 இங்கே என்ன நடந்தது? 236 00:21:44,263 --> 00:21:47,140 அச்சோ, இங்கே என்ன நடந்தது? 237 00:21:47,224 --> 00:21:48,600 எல்லோரும் எங்கே போனார்கள்? 238 00:21:49,685 --> 00:21:51,895 அவர் சொன்னதுதான், இல்லையா? ஏலியன்கள். 239 00:21:58,026 --> 00:22:00,988 பொறு. என் அத்தையின் வீடு அந்த பக்கம் இருக்கிறது. 240 00:22:01,488 --> 00:22:03,407 ஆம், என் வீடும் அந்த பக்கம்தான் இருக்கிறது. 241 00:22:06,159 --> 00:22:08,829 நீங்களும் வரலாம். உங்கள் அம்மாவை அழைக்கலாம்... 242 00:22:08,912 --> 00:22:11,039 முடியாது. தொலைபேசிகள் இயங்கவில்லை. 243 00:22:11,623 --> 00:22:12,749 ஆம். 244 00:22:12,833 --> 00:22:15,586 சரி, என் வீடு ரயில் நிலையத்திற்கு அடுத்து இருக்கிறது. 245 00:22:15,669 --> 00:22:16,670 அதேதான். 246 00:22:19,590 --> 00:22:20,966 பிறகு பள்ளியில் பார்க்கலாம். 247 00:22:27,514 --> 00:22:29,057 ஹேய், முட்டாள். 248 00:22:29,141 --> 00:22:30,392 வாய் மூடிக்கொண்டு போ. 249 00:22:45,699 --> 00:22:46,783 உன் வீடும் அந்த பக்கம் தானா? 250 00:22:48,410 --> 00:22:49,703 நான் வீட்டிற்குப் போகவில்லை. 251 00:22:50,662 --> 00:22:53,248 இதை விட மோசமாக எதுவும் இருக்க முடியாது. 252 00:22:53,332 --> 00:22:55,292 நீ என் வீட்டை பார்த்ததில்லை, நண்பா. 253 00:22:55,375 --> 00:22:57,044 என் வீட்டை விட அவ்வளவு வித்தியாசமானதாக இருக்காது. 254 00:22:57,628 --> 00:22:58,712 -ஒருவேளை... -பெரியது. 255 00:22:59,421 --> 00:23:00,839 ஆம், உன் வீட்டை விட பெரியது. 256 00:23:01,882 --> 00:23:03,300 -உன்னைவிட என் உறுப்பு பெரியது... -சரி. 257 00:23:09,598 --> 00:23:12,142 நான்... நான் அவர்களை பிறகு சந்திக்கிறேன். 258 00:23:17,523 --> 00:23:19,900 என்னை மன்னித்துவிடு... 259 00:23:22,778 --> 00:23:23,946 எல்லாவற்றுக்கும். 260 00:23:24,613 --> 00:23:25,614 பரவாயில்லை, நண்பா. 261 00:23:26,865 --> 00:23:28,116 அது உண்மையில் அப்படியில்லை. 262 00:23:29,535 --> 00:23:32,871 ஆனால், உலகமே அழியப்போகிறது என்பதால்... 263 00:23:49,763 --> 00:23:50,806 பிறகு பார்ப்போம். 264 00:23:54,643 --> 00:23:55,686 போகலாம். 265 00:23:58,272 --> 00:23:59,356 சரி. 266 00:23:59,439 --> 00:24:00,524 வேகமாக வா. 267 00:24:30,220 --> 00:24:31,346 அதில் "இழு" என்று இருக்கிறது. 268 00:24:39,438 --> 00:24:40,731 நன்றி. 269 00:24:58,457 --> 00:25:00,042 பொம்மைகள்! 270 00:25:41,750 --> 00:25:45,087 ஹேய், சாரா, வந்து இதைப் பார். கிட்டத்தட்ட கிடைத்தது. 271 00:25:58,976 --> 00:26:05,190 எனவே சாகச ஓட்டுனர், அறுவை சிகிச்சை நிபுணர், சமையல்காரி. 272 00:26:08,235 --> 00:26:09,862 உனக்கு செய்யத் தெரியாதது என்ன இருக்கிறது? 273 00:26:11,780 --> 00:26:13,740 என்னைப் பற்றி உனக்குத் தெரியாதது நிறைய இருக்கலாம். 274 00:26:17,244 --> 00:26:18,662 எப்படி உதவ வேண்டும் என்று சொல்? 275 00:26:20,747 --> 00:26:21,957 ரொட்டியை எடு. 276 00:26:30,799 --> 00:26:32,217 எனக்கு இது வேண்டும். 277 00:26:40,184 --> 00:26:42,102 இதற்கு முன்பு நாம் ஏன் இதை செய்யவில்லை? 278 00:26:42,895 --> 00:26:44,188 என்ன? 279 00:26:44,271 --> 00:26:46,940 -கைவிடப்பட்ட உணவகத்தில் நுழைவதா? -ஆம். 280 00:26:47,566 --> 00:26:50,569 இல்லை, ஒரு குடும்பமாக சந்தோஷமாக, எல்லோரும் ஒன்றாக, 281 00:26:51,945 --> 00:26:53,655 இது எளிதுதான். 282 00:26:57,409 --> 00:26:58,410 நாம் செய்தோம். 283 00:26:59,494 --> 00:27:01,955 நீதான் அதற்கு அங்கு இல்லை. 284 00:27:08,253 --> 00:27:09,505 நான் இப்போது இங்கே இருக்கிறேன். 285 00:27:17,596 --> 00:27:19,097 வறுவலை கருக விடாதே. 286 00:27:35,948 --> 00:27:38,158 இவ்வளவு எப்படி சாப்பிடுவேன்? 287 00:27:38,992 --> 00:27:40,077 மெதுவாக. 288 00:27:41,995 --> 00:27:44,498 அம்மா. நாம் நன்றி சொல்வோமா? 289 00:27:45,249 --> 00:27:46,792 கடவுளுக்கா? 290 00:27:46,875 --> 00:27:48,252 நாம் தேங்க்ஸ்கிவ்விங்கிற்கு செய்வது போல. 291 00:27:49,169 --> 00:27:50,170 நிச்சயம். 292 00:27:52,756 --> 00:27:53,757 உங்கள் கைகளைக் கொடுங்கள். 293 00:27:56,969 --> 00:27:57,970 அப்பா? 294 00:28:01,181 --> 00:28:03,725 அப்பா நலமாக இருப்பதற்கு நன்றி சொல்கிறேன்... 295 00:28:05,644 --> 00:28:07,396 அம்மா எங்களைக் காப்பாற்றியதற்கு. 296 00:28:08,689 --> 00:28:12,067 நாங்கள் இன்னும் உயிருடன் இருப்பதற்கு நன்றி சொல்கிறேன். 297 00:28:12,985 --> 00:28:15,904 அதோடு, நாம் சாப்பிட உணவும் உட்கார இடமும் கிடைத்ததற்கு. 298 00:28:17,239 --> 00:28:19,116 என்னுடையதை எல்லாம் நீயே சொல்லிவிட்டாய்! 299 00:28:21,034 --> 00:28:22,411 அது அழகாக இருந்தது. 300 00:28:23,704 --> 00:28:25,080 நீ சொல்ல வேண்டுமா, சாரா? 301 00:28:29,710 --> 00:28:31,336 மில்க் ஷேக்கிற்கு நான் நன்றி சொல்கிறேன். 302 00:28:31,420 --> 00:28:33,672 அது என் நண்பன், முழுவதுமாக எனக்கே. 303 00:28:38,051 --> 00:28:40,804 நானும் மில்க் ஷேக்கிற்கு நன்றி சொல்கிறேன். 304 00:28:41,471 --> 00:28:42,472 நானும். 305 00:28:43,390 --> 00:28:45,350 -எல்லோரும் என் இறை நன்றியைத் திருடுகிறீர்கள்! -சரிதான். 306 00:28:45,434 --> 00:28:48,478 இப்போது நான் ஃப்ரைஸையும் திருடுகிறேன். 307 00:28:49,271 --> 00:28:50,272 நிறுத்துங்கள். 308 00:28:51,148 --> 00:28:53,734 -நான் உங்கள் ஃப்ரைஸை எடுக்கிறேன். -மிகவும் தாமதம். 309 00:28:53,817 --> 00:28:54,818 விண்வெளி ஆக்கிரமிப்பாளர்கள் 310 00:28:57,779 --> 00:28:59,907 பல அலைவரிசைகள் இருக்கின்றன. 311 00:29:00,490 --> 00:29:02,075 அவை மீண்டும் மீண்டும் ஒலிப்பவை. 312 00:29:03,202 --> 00:29:04,953 ஆனால் ஹோஷியுடையது வேறு. 313 00:29:05,537 --> 00:29:06,747 இன்னும் தேடுகிறீர்களா? 314 00:29:08,165 --> 00:29:09,249 அந்த மீண்டும் மீண்டும் கேட்கும் ஒலிக்கா? 315 00:29:09,833 --> 00:29:11,376 ஆம், ஆனால்... 316 00:29:11,460 --> 00:29:14,171 ஆனால் நாம் அதை கண்டுபிடிக்க மாட்டோம். 317 00:29:14,796 --> 00:29:16,882 நாம் தாழ்வான சுற்றுப்பாதையில் தேடுகிறோம், 318 00:29:16,965 --> 00:29:19,885 இந்த தொலைநோக்கி அதற்காக செய்யப்பட்டது அல்ல. 319 00:29:20,511 --> 00:29:21,887 இது சத்தம், 320 00:29:23,013 --> 00:29:24,640 செயற்கைக்கோள்களின் குறுக்கீடு. 321 00:29:24,723 --> 00:29:27,226 ஆனால் செயற்கைக்கோள்கள் அழிந்துவிட்டன. 322 00:29:28,185 --> 00:29:30,479 அது வேறு ஏதாவதாக இருக்க வேண்டும். 323 00:29:30,562 --> 00:29:32,189 ஏதோ பெரியது. 324 00:29:33,398 --> 00:29:35,067 டெத் ஸ்டார் விண்வெளி மையம் போல. 325 00:29:35,692 --> 00:29:38,111 டெத் ஸ்டார் 98% உலோகத்தால் ஆனது. 326 00:29:38,946 --> 00:29:41,031 ஆனால் இது ஆற்றல், 327 00:29:41,114 --> 00:29:42,533 அதுவும் நிறைய. 328 00:29:42,616 --> 00:29:45,827 தொகுக்கப்பட்ட அலைவரிசைகள், மாறிக்கொண்டேயிருக்கின்றன. 329 00:29:46,411 --> 00:29:47,996 இது ஒரு வகையான செய்தி. 330 00:29:48,080 --> 00:29:49,414 நான் கேட்கிறேன். 331 00:29:49,915 --> 00:29:51,875 இவை ரேடியோ அலைகள். 332 00:29:51,959 --> 00:29:53,460 அவை ஒலி அலைகளாக மாற்றப்பட்டாலும், 333 00:29:53,544 --> 00:29:55,587 அதில் சத்தமும் கிளிக் ஒலியும்தான் கேட்கும். 334 00:29:56,380 --> 00:29:58,006 பார்த்தீர்களா? இது அலைவரிசை தொகுதி முழுவதும் சிதறடிக்கப்பட்டுள்ளது. 335 00:29:58,090 --> 00:29:59,091 நான் கேட்கிறேன். 336 00:30:02,970 --> 00:30:04,137 இப்போதே. 337 00:30:23,907 --> 00:30:27,411 இது ரேடியோ குறுக்கீட்டின் ஒலி. 338 00:30:27,494 --> 00:30:29,454 இது வெறும் சத்தம்தான். 339 00:30:29,538 --> 00:30:31,582 என்னால் அதை கேட்க முடிகிறது, மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது, 340 00:30:31,665 --> 00:30:33,000 இசைப் போல. 341 00:30:33,584 --> 00:30:36,879 எண்ணற்ற ரேடியோக்கள் ஒரே நேரத்தில் ஒலிப்பது போல. 342 00:30:37,671 --> 00:30:39,256 எண்ணற்ற குரல்கள். 343 00:30:41,300 --> 00:30:43,510 தனி உயிரினங்கள்... 344 00:30:45,137 --> 00:30:47,764 ஒன்றாக எதிரொலிக்கின்றன. 345 00:30:47,848 --> 00:30:49,099 ஒருவேளை... 346 00:30:50,726 --> 00:30:53,604 இது ஒலிபரப்பப்பட்ட செய்தி இல்லை என்றால்? 347 00:30:55,856 --> 00:30:58,150 இது ஒரு நெட்வொர்க்காக இருந்தால்? 348 00:30:58,233 --> 00:31:02,029 நாம் அதோடு இணைந்திருக்கிறோம். நெட்வொர்க்கில் உள்ள எல்லா கணினிகளையும் 349 00:31:02,112 --> 00:31:04,281 கட்டுப்படுத்தும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டருக்கு இணையான 350 00:31:04,364 --> 00:31:07,868 படிநிலை விநியோகிக்கப்பட்ட நெட்வொர்க்கின் பாதுகாப்பு அரணை உடைத்திருக்கிறோம். 351 00:31:09,828 --> 00:31:13,165 ஒரு கூட்டு மனநிலை போலவா? 352 00:31:13,248 --> 00:31:14,791 வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 353 00:31:15,334 --> 00:31:21,006 நாம் ஒரு கூட்டில் ஒரு குரலைத் தேடுகிறோமா? 354 00:31:21,840 --> 00:31:22,966 ஆம். 355 00:31:24,176 --> 00:31:28,305 ML நெட் அடையாளம் கண்ட மற்ற வடிவங்களையும் விலக்க சிக்னல் வடிகட்டியைப் பயன்படுத்து. 356 00:31:28,388 --> 00:31:31,266 பின்னணியில் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் சத்தத்தையும் குறை, 357 00:31:31,350 --> 00:31:33,852 பிறகு ஹோஷி ஒலிபரப்பிலிருந்து குரலைக் கண்டுபிடி. 358 00:31:35,103 --> 00:31:37,689 இதற்கு கொஞ்சம் நேரம் ஆகும். 359 00:31:39,149 --> 00:31:41,777 இன்றிரவு யாரும் தூங்கக் கூடாது. 360 00:31:41,860 --> 00:31:43,904 தங்கும் இடம் 361 00:31:45,447 --> 00:31:47,157 எங்கே போகிறோம்? 362 00:31:49,993 --> 00:31:51,620 பாதுகாப்பான இடத்துக்கு, செல்லம். 363 00:32:01,880 --> 00:32:02,881 அகதிகள் 364 00:32:02,965 --> 00:32:05,425 போ. போ! 365 00:32:06,718 --> 00:32:08,303 நார்த்வியூ கல்லூரி 366 00:32:08,387 --> 00:32:11,139 பிராவோ ஒன், வடக்கு வளாக கூடாரத்துக்கு போகலாம். 367 00:32:23,026 --> 00:32:24,152 இது ஒரு பள்ளி. 368 00:32:24,653 --> 00:32:25,779 எல்லோரும் எங்கே போனார்கள்? 369 00:32:26,446 --> 00:32:28,365 அவசர உதவி தேவையில்லாதவர்கள், மஞ்சள் நிறத்தைப் பின்பற்றுங்கள். 370 00:32:28,448 --> 00:32:30,325 உதவி தேவைப்பட்டால், சிவப்பு நிறத்தைப் பின்பற்றுங்கள். 371 00:32:31,451 --> 00:32:32,578 அவை உங்களுக்கு வழிகாட்டும். 372 00:32:34,496 --> 00:32:36,832 -இங்கே செல்லுங்கள். -நன்றி. 373 00:32:36,915 --> 00:32:40,335 -சிவப்பு அவசர உதவிக்கானது. -சரிதான், செல்லம். 374 00:32:43,088 --> 00:32:44,089 மன்னிக்கவும். 375 00:32:44,173 --> 00:32:45,883 சரி, சார். 376 00:32:47,092 --> 00:32:48,719 சரி, நண்பர்களே, நாம்... 377 00:32:50,179 --> 00:32:51,346 டாக்டர் லாக்ஹார்ட். 378 00:32:57,603 --> 00:32:58,979 உனக்கு இவரை தெரியுமா? 379 00:33:00,898 --> 00:33:01,982 நீ நலமா? 380 00:33:04,693 --> 00:33:06,445 ஆம். 381 00:33:06,945 --> 00:33:08,530 இதுதான் என் குடும்பம். 382 00:33:16,288 --> 00:33:17,414 நான் டாக்டர் பார்டன். 383 00:33:18,749 --> 00:33:20,501 நாங்கள் இப்போதுதான் வந்தோம்... 384 00:33:21,752 --> 00:33:24,171 நிச்சயமாக. நாம் இங்கே மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம். 385 00:33:24,254 --> 00:33:27,341 நம்மிடம் நிறைய வீரர்களும் அவர்களிடம் நிறைய துப்பாக்கிகளும் இருக்கின்றன. 386 00:33:32,054 --> 00:33:33,055 ஹேய். 387 00:33:38,101 --> 00:33:39,269 நீங்கள் நலமா? 388 00:33:42,189 --> 00:33:43,732 ஆம். நான் அஹமது. 389 00:33:43,815 --> 00:33:45,609 நியூமோதொராக்ஸ். நான் முதலுதவி செய்தேன். 390 00:33:45,692 --> 00:33:49,279 அதை கழுவி, சுத்தம் செய்து தைக்க வேண்டும். அது சுத்தமாக இல்லை. 391 00:33:49,363 --> 00:33:51,198 நிச்சயமாக. உங்களுக்கு வேண்டுமா... 392 00:33:55,369 --> 00:33:56,620 நாங்கள் எங்கே காத்திருப்பது? 393 00:33:57,538 --> 00:33:59,164 நாங்கள் அரிதாகவே இங்கிருந்து வெளியே போகிறோம். 394 00:33:59,248 --> 00:34:01,792 இரண்டு லாரிகள், ஒரு ஜோடி ஹம்வீக்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ். 395 00:34:02,292 --> 00:34:04,795 நீங்கள் போனபோது மற்ற அனைவரும் திரும்பவே மாட்டீர்கள் என்று நினைத்தோம். 396 00:34:05,337 --> 00:34:06,964 செல்லம், நான் உன்னை தூக்கிக்கொள்ளட்டுமா? 397 00:34:14,972 --> 00:34:19,434 இங்குதான் எல்லோரும் குவிந்திருக்கிறார்கள், ஆனால் விஐபிக்களுக்கான தனி இடம் உள்ளது. 398 00:34:21,143 --> 00:34:22,145 லூக்! 399 00:34:24,356 --> 00:34:25,565 இந்த இடம் உங்களுக்குத்தான். 400 00:34:27,525 --> 00:34:30,195 எங்களிடம் இருந்தால் சில போர்வைகள் மற்றும் தலையணைகளை கொண்டு வருகிறேன், 401 00:34:30,279 --> 00:34:31,737 அல்லது தலையணை போன்ற ஒன்றை. 402 00:34:32,864 --> 00:34:34,699 உணவு தேவையா? பயணம் செய்திருக்கிறீர்கள். 403 00:34:35,199 --> 00:34:36,451 மில்க்க்ஷேக்குகளை குடித்தோம். 404 00:34:37,703 --> 00:34:39,913 -நீங்கள் திரும்பி வந்தது நல்லது, டாக்டர். -நன்றி. 405 00:34:44,333 --> 00:34:45,835 உங்களை டாக்டர் லாக்ஹார்ட் என்று அழைத்தனர். 406 00:34:47,379 --> 00:34:48,463 அவர் குழப்பத்தில் உள்ளார். 407 00:34:49,882 --> 00:34:51,132 நீங்கள் அப்பாவைக் காப்பாற்றினீர்கள். 408 00:34:52,050 --> 00:34:53,467 நான் செய்தேன். 409 00:34:53,552 --> 00:34:54,553 வா. 410 00:34:55,053 --> 00:34:56,471 எனவே நீங்கள் ஒரு மருத்துவர். 411 00:34:57,556 --> 00:34:59,933 மருத்துவராக இருந்தேன். கிட்டத்தட்ட. 412 00:35:01,768 --> 00:35:04,104 ஆனால் பிறகு என்னை பெற்றீர்கள். 413 00:35:07,107 --> 00:35:08,692 நீங்கள் மருத்துவராக விரும்பினீர்களா? 414 00:35:10,819 --> 00:35:12,279 நான் உன்னை விரும்பி பெற்றேன், 415 00:35:12,362 --> 00:35:13,488 உங்கள் இருவரையும். 416 00:35:16,742 --> 00:35:17,743 அம்மா? 417 00:35:18,493 --> 00:35:19,703 என்ன, செல்லம்? 418 00:35:20,662 --> 00:35:22,789 மக்களுக்கு பைத்தியம் பிடித்தால் என்ன செய்வது? 419 00:35:23,790 --> 00:35:24,833 என்ன சொல்கிறாய்? 420 00:35:25,417 --> 00:35:28,045 அந்த வீட்டில் இருந்த பெண்ணைப் போல. 421 00:35:28,128 --> 00:35:30,005 அவளுக்குப் பைத்தியம் பிடித்தது, நான் விழுந்தேன். 422 00:35:32,341 --> 00:35:33,509 நாம் இங்கே பாதுகாப்பாக இருக்கிறோம். 423 00:35:34,510 --> 00:35:37,054 ஆனால் மக்கள் எல்லோருக்கும் பைத்தியம் பிடித்தால் என்ன செய்வது? 424 00:35:40,766 --> 00:35:42,559 நாம் எல்லோருமே கொஞ்சம் பைத்தியம் பிடித்தவர்கள்தான். 425 00:35:42,643 --> 00:35:44,728 நமக்குப் பைத்தியம் இல்லை. நாம் சாதாரணமானவர்கள். 426 00:35:46,688 --> 00:35:49,691 நாம் பைத்தியமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் சாதாரணமானவர்களும் அல்ல. 427 00:35:50,901 --> 00:35:51,985 யாருமே இல்லை. 428 00:35:56,114 --> 00:35:57,115 இனிமேல் கிடையாது. 429 00:36:01,078 --> 00:36:02,246 உனக்கு பயமாக இருக்கிறதா? 430 00:36:04,790 --> 00:36:05,874 உனக்கு இல்லையா? 431 00:36:06,542 --> 00:36:07,960 ஆம். ஆனால் எனக்கு நீ இருக்கிறாய். 432 00:36:12,381 --> 00:36:13,590 இந்த வழியாகவா? 433 00:36:15,551 --> 00:36:16,552 உனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. 434 00:36:17,719 --> 00:36:19,388 அவர்களுக்குத் தெரியாத ஏதோ, இல்லையா? 435 00:36:20,764 --> 00:36:23,600 அல்லது விபத்து, எல்லாவற்றிற்கும் முன்பாக எதையோ பார்த்திருக்கிறாய். 436 00:36:24,101 --> 00:36:26,061 உன்னுடைய ஓவியங்கள், அதிலெல்லாம். 437 00:36:29,523 --> 00:36:30,816 நீ என்னிடம் சொல்லலாம். 438 00:36:31,984 --> 00:36:33,360 நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். 439 00:36:37,614 --> 00:36:38,740 நீ ஏன் என்னிடம் சொல்ல மறுக்கிறாய்? 440 00:36:41,285 --> 00:36:42,327 என் மூளை, 441 00:36:43,745 --> 00:36:47,624 நான் பிறந்ததிலிருந்தே ஏதோ தவறாக இருக்கிறது. 442 00:36:47,708 --> 00:36:48,834 வலிப்பு... 443 00:36:48,917 --> 00:36:52,963 ஆம். இல்லை, ஆனால் இப்போது அது வேறு. 444 00:36:54,047 --> 00:36:55,257 இது ஏதோ... 445 00:36:58,844 --> 00:37:00,220 எனக்குத் தெரியவில்லை. அது... 446 00:37:00,304 --> 00:37:02,556 நான் விஷயங்களைப் பார்ப்பது போல இருக்கிறது. விஷயங்களை உணர முடிகிறது. 447 00:37:02,639 --> 00:37:04,308 அதோடு அது... 448 00:37:04,391 --> 00:37:07,519 எனக்கு வெளியே ஏதோ இருக்கிறது, ஆனால் அது எனக்குள்ளும் இருக்கிறது. 449 00:37:07,603 --> 00:37:10,355 அதோடு இந்த குரல். 450 00:37:11,398 --> 00:37:12,399 அதோடு... 451 00:37:17,613 --> 00:37:18,947 அது... 452 00:37:20,616 --> 00:37:22,409 அது என் தலையின் உள்ளே இருந்து வருகிறது. 453 00:37:25,746 --> 00:37:26,914 இது காயப்படுத்துகிறதா? 454 00:37:30,334 --> 00:37:32,419 அது நடக்கும் போது, ஆம். 455 00:37:48,143 --> 00:37:50,312 -ஓடுவோம். -வேண்டாம். ஓடாதே. 456 00:39:43,091 --> 00:39:44,801 நான் என் அம்மாவிடம் செல்ல வேண்டும். 457 00:39:45,344 --> 00:39:47,387 ஆம். நம் அம்மாக்களிடம். 458 00:39:50,098 --> 00:39:51,099 போகலாம். 459 00:39:56,313 --> 00:39:58,148 காபூல் விமான நிலையம் 460 00:40:14,748 --> 00:40:16,708 ஹேய்! 461 00:40:17,292 --> 00:40:19,253 விமானங்களை தவறவிட்டோம். இங்கு யாரும் இல்லை. 462 00:40:36,937 --> 00:40:38,146 நம்பிக்கை வைப்போம். 463 00:40:55,956 --> 00:40:57,207 ஒரு விமானம் உள்ளது! 464 00:41:08,802 --> 00:41:10,846 ஹேய்! அமெரிக்க கடற்படை வீரன்! 465 00:41:11,346 --> 00:41:12,973 அமெரிக்க கடற்படை வீரன்! 466 00:41:14,683 --> 00:41:16,643 உன்னை சுட்டுவிடுவேன் என்கிறார்கள், நண்பா! நிறுத்து! 467 00:41:16,727 --> 00:41:18,061 கந்தஹாரில் இருந்து வந்த அமெரிக்க கடற்படை வீரன். 468 00:41:19,188 --> 00:41:21,231 அட. அவனிடம் சொல்! 469 00:41:21,315 --> 00:41:23,483 அமெரிக்க இராணுவம். 470 00:41:23,567 --> 00:41:25,903 சரி? நான் இப்போதே இந்த விமானத்தில் ஏறுகிறேன். 471 00:41:25,986 --> 00:41:28,530 நீங்கள் போகும் இடத்துக்கு நான் வருகிறேன்... ஹேய்! பின்னாடி போ! 472 00:41:29,323 --> 00:41:30,324 பின்னாடி செல்லுங்கள்! 473 00:41:31,366 --> 00:41:32,826 என்ன? 474 00:41:32,910 --> 00:41:34,745 ஆம்! அவர்களை ஏற்றுங்கள்! 475 00:41:34,828 --> 00:41:36,747 வாருங்கள். சீக்கிரம். 476 00:41:51,470 --> 00:41:52,596 ஹேய்! 477 00:41:52,679 --> 00:41:53,931 ஹேய்! இவன் என்னோடு வந்தவன். 478 00:41:57,601 --> 00:41:59,144 நீ என்ன செய்கிறாய்? 479 00:42:01,522 --> 00:42:03,899 பரவாயில்லை! இவன் நல்லவன்! 480 00:42:06,944 --> 00:42:08,612 அவனிடம் சொல்! இவன் என்னோடு வந்தவன்! ஹேய்! வேண்டாம்! 481 00:42:09,196 --> 00:42:10,739 ஹேய்! அவனை விடுங்கள்! இல்லை! 482 00:42:10,822 --> 00:42:12,407 அவனை விடுங்கள்! ச்சே. 483 00:42:13,325 --> 00:42:16,078 இதை எடுத்துக்கொள். இதோ. சரியா? 484 00:42:16,161 --> 00:42:18,747 டாக்டிகல் நோக்கி கொண்ட கடற்படை M4 துப்பாக்கி. 1,000 டாலர்கள் மதிப்புடையது. 485 00:42:18,830 --> 00:42:20,165 நான் இதை உனக்கு தருகிறேன். 486 00:42:20,832 --> 00:42:22,709 அவனை, அவனது குடும்பத்தினரை உள்ளே விடு. அவனிடம் சொல். 487 00:42:31,051 --> 00:42:32,094 சரியா? 488 00:42:34,596 --> 00:42:35,597 போ. 489 00:42:57,077 --> 00:42:58,620 கடவுள் உன்னை கவனிக்கிறார். 490 00:43:03,625 --> 00:43:05,460 என்னைப் பற்றி தெரிந்தால், நீ அப்படி சொல்லமாட்டாய். 491 00:43:11,341 --> 00:43:13,343 கடவுளின் பார்வை என் மீது அல்ல. 492 00:43:26,231 --> 00:43:28,734 மோசஸ் வீட்டை தேடி பாலைவனத்தைக் கடந்தார். 493 00:43:32,779 --> 00:43:34,114 கடவுள் உன்னை கவனிக்கிறார். 494 00:43:58,722 --> 00:44:00,557 காபி. 495 00:44:00,641 --> 00:44:06,104 இந்த ஒலி முறை பல மணிநேரங்கள் அல்லது நாட்களுக்கு முன்பே நின்றிருக்கலாம். 496 00:44:06,647 --> 00:44:10,817 இப்போது இல்லாத ஒன்றை நாம் தேடிக்கொண்டிருக்கலாம். 497 00:44:10,901 --> 00:44:14,112 இல்லை. அது அங்கே இருக்க வேண்டும். 498 00:44:14,738 --> 00:44:16,823 அது மறைந்துவிட்டது. 499 00:44:16,907 --> 00:44:18,283 இல்லை, அது மறையவில்லை. 500 00:44:22,579 --> 00:44:25,290 இது 89 மில்லியன் ஒலி வடிவங்களுக்கு மேல் அடையாளம் கண்டிருக்கிறது. 501 00:44:25,374 --> 00:44:27,334 ஹோஷியில் இருந்து வந்த ஒலி வடிவம் இல்லை. 502 00:44:27,918 --> 00:44:28,919 இது என்ன? 503 00:44:30,003 --> 00:44:31,338 முடிவுகளின் தொகுதி. 504 00:44:31,421 --> 00:44:32,756 இல்லை! இங்கே. 505 00:44:32,840 --> 00:44:34,174 இது தனியாக உள்ளது. 506 00:44:36,927 --> 00:44:38,887 ஒரு முரண்பாடு. 507 00:44:38,971 --> 00:44:40,806 ஒருவேளை பறவை கருவிக்குள் நுழைந்திருக்கலாம். 508 00:44:40,889 --> 00:44:42,933 அல்லது அழிக்கப்பட்ட செயற்கைக்கோள்களில் ஒன்றாக இருக்கலாம். 509 00:44:43,600 --> 00:44:44,893 அந்த ஒலி வடிவத்தை தனிமைப்படுத்து. 510 00:44:44,977 --> 00:44:46,353 அதை மேலே கொண்டுவா. 511 00:44:57,781 --> 00:44:58,782 இதோ இருக்கிறது. 512 00:44:59,533 --> 00:45:01,243 ஆனால் இது உங்கள் ஒலி வடிவம் அல்ல. 513 00:45:01,326 --> 00:45:02,786 -அதை ஒலிக்கவிடு. -ஏன்? 514 00:45:02,870 --> 00:45:03,996 இது... 515 00:45:04,830 --> 00:45:06,456 இது... 516 00:45:07,249 --> 00:45:08,500 ஹோஷி-12. 517 00:45:09,293 --> 00:45:11,628 இது விண்கலத்தின் அபாய எச்சரிக்கை ஒலி. 518 00:45:11,712 --> 00:45:13,964 ஆண்டெனாவை திருப்பு. 519 00:45:32,232 --> 00:45:33,317 ஹோஷி-12. 520 00:45:34,568 --> 00:45:35,527 அதில் நிலைநிறுத்து. 521 00:45:48,081 --> 00:45:49,791 நிலைநிறுத்திவிட்டேன். 522 00:45:50,292 --> 00:45:51,293 அதைக் கண்டுபிடி. 523 00:45:51,376 --> 00:45:52,419 கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட்டேன். 524 00:45:53,754 --> 00:45:55,422 ஹினாடா, நான் வருகிறேன். 525 00:46:01,386 --> 00:46:03,013 கணினியிடம் இருந்து விலகு! 526 00:46:03,096 --> 00:46:05,140 எல்லாவற்றையும் நிறுத்து! 527 00:46:07,893 --> 00:46:09,311 ஆண்டெனா அனுமதிகள் சுழற்சி பூட்டு - மாற்று 528 00:46:09,394 --> 00:46:10,812 உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன்! 529 00:46:14,942 --> 00:46:16,318 உள்நுழை (மாற்று) பயனாளர் பெயர் - கடவுச்சொல் 530 00:46:16,401 --> 00:46:18,403 என்னை விடுங்கள்! 531 00:46:19,488 --> 00:46:21,448 ஹினாடா? 532 00:46:21,532 --> 00:46:24,284 ஹினாடா! என்னை விடுங்கள்! 533 00:48:05,385 --> 00:48:07,387 வசனத் தமிழாக்கம் அருண்குமார்